தமிழ்நாடு

”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”

சென்னை, அமைந்தகரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலை மீது தவெக-வினர் தங்களது கட்சிக் கொடியை நாட்டி அவமானமான செயலை செய்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தவெக கட்சி இந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாமல், அந்தக் கட்சிக்கும் இந்தக் கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை என தவித்து வருகிறது.

ஆனால், அவர்களது கட்சித் தொண்டர்கள் என்ற பெயரில் சுற்றும் கோமாளிகளோ ஏதோ இவர்கள் தான் தமிழ்நாடு என்பது போல, தேர்தல் வெற்றிக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இன்று தான் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருபக்கம் தஞ்சாவூர் எம்எல்ஏ விஜய் சரவனை நண்பர்களுடன் குடித்துவிட்டு உச்சகட்ட மதுபோதையில் கையில் மதுபாட்டிலுடன் சாலையோரம் குத்தாட்டம் ஆடி வருகிறார்.

மறுபுறம் வெற்றிக் களிப்பில் செய்வதறியாது கையில் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். இப்படி தமிழ்நாடு முழுவதும் சொல்லொண்ணா துயரத்தை மக்களுக்கு அளித்து வரும் தவெக-வினர் தற்போது வரை யாரும் பதவி கூட ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”

தலைநகர் சென்னையில் அமைந்தகரை பகுதியில் அமைந்துள்ள அண்ணா வளைவின் முன் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையில் தவெக கட்சியின் கொடியை சொருகி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையுடன் இந்தச் செயலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ்நாட்டின் முகமே அண்ணா தான். ஆனால் இன்று அப்பேற்பட்ட ஆசான் மீது கொள்கையில்ல்லாத, கொள்கையா அப்படி என்றால் என்ன என்றும் கேட்கும் கோமாளிக் கூட்டம் இது போன்றதொரு செயலை செய்துள்ளது.

இப்படிப்பட்ட செயலை செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை பாய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.

banner

Related Stories

Related Stories