தமிழ்நாடு

அது சங்கிகள் மாநாடு.. தமிழிசை ரொம்ப அறிவாளி... - பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸை வறுத்தெடுத்த அமைச்சர் சேகர்பாபு!

அது சங்கிகள் மாநாடு.. தமிழிசை ரொம்ப அறிவாளி... - பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸை வறுத்தெடுத்த அமைச்சர் சேகர்பாபு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேசுவரர் திருக்கோயில் திருத்தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் திருத்தேரினை பக்தி பரவசத்தோடு நான்கு மாட வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்தனர். இதனால் புரசைவாக்கம் பகுதியில் காவல்துறையினர் சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது :-

திராவிட மாடல் ஆட்சியில் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்தர்கள் தேவையை அறிந்து புதிய தேர்கள், இரவு நேரத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி, பக்தர்கள் தேவைக்காக திருமண மண்டபம், ஆகம விதிகள் படி 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் குடமுழுக்கு, அன்னதான திட்டம், மலைக் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மருத்துவமனைகள், பல ஆண்டுகள் பயன்பாடு இல்லாமல் இருந்த தங்க தேர்கள் என திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் பக்தி பரசவத்தோடு பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

81 லட்சம் செலவில் கோவில் திருத்தேர் புதிதாகவும், 14 லட்ச ரூபாய் செலவில் மற்றொரு தேர் பழுது நீக்கி இயக்கப்பட்டுள்ளது. 2008 ஏப்ரல் 23 ஆம் தேதி கடைசியாக இந்த கோவில் தேரோட்டம் நடைபெற்றது. அதற்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து 2024 நவம்பர் 28 ஆம் தேதி 4 கோடி செலவில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

file pic
file pic

திமுக ஆட்சி அமைந்து 134 புதிய தேர்கள் செய்ய 130 கோவில்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அளவில் அதிக எண்ணிக்கை கொண்ட திருத்தேர் செய்யும் பணி இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டதிலிருந்து செய்யப்படவில்லை என்பதே வரலாற்று உண்மை.

75 தேர்கள் மராமத்து பணிகள் 19.20 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. 9 இடங்களில் வெள்ளி தேர் அறிவித்து இருந்தோம். அது தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 450 கிலோ எடை கொண்ட வெள்ளி தேர் நெல்லையப்பர் கோவிலுக்கு தயாராகி வருகிறது. இந்த தேர் நவம்பர் மாதத்திற்குள் வீதி உலா வரும். இன்று மட்டும் 24 கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. வரும் 8ஆம் தேதி 74 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3,500 கோவில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும்.

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு பணிகள் பொறுத்தவரை பேருந்து நிறுத்தும் இடங்கள் 3 தேர்வு செய்யப்பட்டுள்ளது. 400 கோடி அளவில் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. எந்த பணிகள் எல்லாம் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய முடியும் என்று ஆய்வு செய்துள்ளோம். இரவு தங்கும் இட வசதி உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்தோம். பல்வேறு திட்டமிடல்கள் கூட்டத்தை சமாளிப்பது குறித்து செய்யப்பட்டது.

அது சங்கிகள் மாநாடு.. தமிழிசை ரொம்ப அறிவாளி... - பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸை வறுத்தெடுத்த அமைச்சர் சேகர்பாபு!

இதுவரையில் நடைபெறாத வகையில் என் அய்யன் முருகனுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம். நீண்ட சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது. திட்டங்கள் பல உருவாகலாம் அது நல்ல திட்டமாகவும் இருக்கலாம், சதித்திட்டமாகவும் இருக்கலாம், நம்மைப் பொறுத்தவரை நேர்வழியில் நேர்மையான வழியில் சென்று கொண்டிருக்கிறோம். நீதி நம் பக்கம் தான் இருக்கும்.

அடுத்த மாதம் 7 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும். குட முழுக்கு நடத்த பிறகு 3 மணி‌ நேரத்துக்கு பிறகு தான் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் நடத்த அனுமதிக்கப்படும். திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி 6 நாட்கள் திருவிழா நடைபெறும்.

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் முருகர் மாநாடு முழுக்க முழுக்க சங்கிகள் நடத்தும் மாநாடு; அரசியல் மாநாடு. அதற்கும் திருக்கோவில் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளது. நாங்கள் அரசு சார்பில் நடத்திய மாநாட்டில் 27 நாடுகளை சேர்ந்த முருகன் பக்தர்கள் பங்கேற்றார்கள்.

file pic
file pic

இரண்டு நாள் நிகழ்ச்சியில் திட்டமிட்டு நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. திட்டமிட்டு வசூல் வேட்டை நடத்தவில்லை. அவர்களுக்காக வாகனங்களை ஏற்பாடு செய்யவில்லை. குறைந்தது ஒரு நாளைக்கு 7 முதல் 8 லட்சம் மக்கள் வந்தார்கள். அங்கு வைத்திருந்த 3d திரையில் முருகன் மாநாட்டை இரண்டு நாட்கள் நடத்துவதாக தான் திட்டமிடப்பட்டு இருந்தது. பக்தர்கள் கோரிக்கைகளை ஏற்று ஏழு நாட்களாக மாற்றப்பட்டது.

அரசியல் தேவைகளுக்காக அரசியல் சூழ்நிலைகளுக்காக மதத்தால் எப்படி எல்லாம் பிளவுபடுத்த முடியுமோ அதற்கான ஆயுதமாக இந்த மாநாட்டை அவர்கள் பயன்படுத்த நினைக்கிறார்கள்" என்றார்.

=> தமிழிசை சௌந்தரராஜன் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு,

"அவர் ஒரு சிறந்த அறிவாளி, அவரிடம் ஆலோசனைகளை போதனைகளை கேட்டு தான் பாரதிய ஜனதா நடந்து கொண்டதன் காரணமாகத்தான் அவர் நிற்கும் தேர்தலில் தோல்வி என்ற பரிசை தமிழக மக்கள் கொடுத்தார்கள். அவரை நேரடியாக ஒன்றியத்துக்கு அனுப்பி ஆலோசனைகளை இதுபோல் வழங்க சொல்லுங்கள். எங்கள் முதல்வர் காலில் நகம் முளைத்த காலத்தில் இருந்து அவர் கால் படாத தெருக்களை இல்லை என்ற வகையில் அரசியலைக் கற்றவர், கலைஞர் அவர்களால் பயிற்சி வைக்கப்பட்டவர் அவருக்கு இவர்களைப் போன்றவர்கள் ஆலோசனை சொல்லி கட்சியை நடத்த வேண்டிய அவசியம் இருக்காது." என்றார்.

banner

Related Stories

Related Stories

live tv