தமிழ்நாடு

செம்மொழிநாள் : முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

செம்மொழிநாள் : முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஏழை எளிய மக்கள் கல்வி, அறிவியல், சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்றிட எண்ணற்ற சிறப்பான சமூக நலத்திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திய நவீன தமிழ்நாட்டின் சிற்பு முத்தமிழறிஞர் கலைஞரின் 102 ஆவது பிறந்த நாள் மற்றும் செம்மொழிநாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல் முரசொலி அலுவலகத்திலும், கோபாலபுரம் இல்லத்திலும் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்” என முத்தமிழறிஞர் கலைஞருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories