நம் எதிர்கால சந்ததிக்கு தூய்மையான சுற்றுச்சூழலை அளித்திட, தமிழ்நாடு அரசு சார்பில் தூய்மை Mission திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டம் குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் வகையில் ஏராளமான விழிப்புணர்வுகளை மக்களின் சேர்க்கும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதள பதிவில், "ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது!
யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும்.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது.விரைவில் தொடங்கப்படவுள்ள #தூய்மை_Mission-இல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்!"என்று கூறப்பட்டுள்ளது.