தமிழ்நாடு

வரலாற்றிலேயே முதல்முறை... முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம் - எங்கு? எப்போது?

வரலாற்றிலேயே முதல்முறை... முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம் - எங்கு? எப்போது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் தொல்லைகள் கொடுத்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். ஆன்லைன் ரம்மி தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், இதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி தமிழ்நாடு அரசு வெற்றி கண்டு வருகிறது.

எவ்வளவு குடைச்சல் கொடுத்தாலும், தமிழ்நாடு அரசு அதனை தூசி போல் ஊதி விட்டு முன்னேறி செல்கிறது. அந்த வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கத்தை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.

வரலாற்றிலேயே முதல்முறை... முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம் - எங்கு? எப்போது?

அதன்படி ஆளுநர் ஒப்புதல் அளிக்காத மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்தது. அதோடு ஆளுநரின் செயலுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அதில் முக்கிய மசோதாவான பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரம் உட்பட, பல்கலைகழகங்கள் தொடர்பாக ஆளுநரிடம் இருந்த அதிகாரங்களை அனைத்து தமிழ்நாடு அரசுக்கு மாற்றம் செய்தும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதற்கு பலரும் உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து அந்த 10 மசோதாக்களையும் அமல்படுத்தி தமிழ்நாடு அரசு, அரசிதழில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. இந்த சூழலில் அந்த 10 மசோதாக்களில் ஒன்றான, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வந்ததை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

வரலாற்றிலேயே முதல்முறை... முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம் - எங்கு? எப்போது?

அதன்படி இன்று (ஏப்.16) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று மாலை சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 10 துணை வேந்தர்கள், 22 பதிவாளர்கள் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் உயர் கல்வியை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்க உள்ளார். வரலாற்றிலேயே முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் பதிவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories