தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் அருங்காட்சியகம் - முதலமைச்சர் பெருமிதம் !

மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் அருங்காட்சியகம் - முதலமைச்சர் பெருமிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரே, காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதலமைசச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திடந்துவைத்தார்.

இந்த அருங்காட்சியகத்துக்கு "அனைத்தும் சாத்தியம்" என்று பெயரிடப்பட்ட நிலையில், இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்திலும், உதவி சாதனங்களும் காட்சிப்படுத்துப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் அருங்காட்சியகம் - முதலமைச்சர் பெருமிதம் !

இந்த நிலையில், "அனைத்தும் சாத்தியம்" அருங்காட்சியகம், மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் மையமாக வெற்றியடைந்துள்ளதைக் கண்டு மகிழ்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், "சமூகத்தின் விளிம்பில் இருப்போருக்கும் சமவாய்ப்பளித்து, மையநீரோட்டத்தில் இணைத்துக் கரம் கோத்துப் பயணிப்பதுதான் ஒரு முற்போக்கான முதிர்ந்த சமூகத்தின் அடையாளம்!

அவ்வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மெரினாவில் நான் திறந்து வைத்த #அனைத்தும்_சாத்தியம் (Museum of Possibilities) அருங்காட்சியகம் பெயருக்கேற்ற வகையில், மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் மையமாக வெற்றியடைந்துள்ளதைக் கண்டு மகிழ்கிறேன்"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories