தமிழ்நாடு

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கவனத்திற்கு : உங்களுக்கான அறிவிப்புகள் இதோ!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,906 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கவனத்திற்கு :  உங்களுக்கான அறிவிப்புகள் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

இக்கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை:-

1. காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தரம் உயர்த்தி 800 படுக்கைகளுடன் கூடிய தன்னாட்சி பெற்ற மையமாகச் செயல்படும் வகையில் ரூ.120 கோடி நிதி வழங்கப்படும்.

2. கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் வகையில் 14 வயது அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் HPV தடுப்பூசி படிப்படியாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.

3. நடமாடும் மருத்துவக்குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் மகளிர் பயன்பெறும் வகையில் அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று மருத்துவ சேவை வழங்குவதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு.

4. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடியே 20 லட்சம் பேர் பயன். 2024 ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

5. இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மைக் காக்கும் - 48 திட்டத்தின் கீழ் 3,43,156 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.

6. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 21,906 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்:-

1. 10 லட்சம் குறு, சிறு மற்றும் தடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும்.

2.திருமுடிவாக்கம், சாரம், நாயனூர், நாகம்பள்ளி, சூரியூர், கருத்தபுளியம்பட்டி, தனிச்சியம், நடுவூர், நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் 398 ஏக்கர் பரப்பளவில் ரூ. 366 கோடியில் புதிய தொழிற்பேட்டைகள் (SIDCO) உருவாக்கப்படும்.

3. தேனி மாவட்ட நறுமணப் பொருட்கள், நாமக்கல் முட்டை உணவு சார்ந்த பொருட்கள், பரமக்குடியில் மின் கடத்தி உபகரணங்கள், தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள், சென்னையில் பொறியியல் உற்பத்தி பொருட்களுக்கு ரூ.50 கோடியில் பொது வசதி மையங்கள் உருவாக்கப்படும்.

4. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு.

5. கலைஞர் கைவினைத் திட்டத்தில் 19 கைவினைஞர்களுக்கு உதவிடும் வகையில் மானிய நிதியாக ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு.

6. தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7. விண்வெளித் தொழில்நுட்ப நிதியாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

8. குறு, சிறு மற்றும் நடத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1,918 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories