சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் கீழ் தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களின் விவரங்கள், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி, அத்திட்டங்கள் நிறைவுபெற எதிர்பார்க்கப்படும் காலக்கெடு போன்ற விவரங்களை அறிவிக்க வேண்டும் என தி.மு.க எம்.பி பி.வில்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
சென்னை முதல் பெங்களூரு வரையிலான விரைவுச் சாலை திட்டம் நிறைவுறுவதில் தாமதம் ஏற்படுவதை குறிப்பிட்டு அதை விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஒரு முறை ஒரு சுங்கக் கட்டணம் எனும் அனுமதிச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதால் பயணிகளுக்கு போக்குவரத்து சிரமங்கள் குறையும். அதற்கான சாத்தியங்களை ஆராய வேண்டும்.
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் வசூல் செய்யப்பட்ட தொகை பற்றிய வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும். ஏற்கனவே மூதலீடு செய்த தொகையை சுங்கக் கட்டணங்கள் மற்றும் NHAI மூலம் பெறப்பட்ட சுங்கச் சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பி.வில்சன் MP வலியுறுத்தியுள்ளார்.