தமிழ்நாடு

மக்­க­ளி­டம் ‘அப்பா’ என்ற அன்பை பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : ‘ஈ நாடு’ தெலுங்கு பத்திரிகை புகழாரம்!

மக்­க­ளி­டம் ‘அப்பா’ என்ற அன்­பைப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார் என ‘ஈ நாடு’ தெலுங்கு பத்திரிகை புகழாரம் ஈட்டியுள்ளது.

மக்­க­ளி­டம் ‘அப்பா’ என்ற அன்பை பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : ‘ஈ நாடு’ தெலுங்கு பத்திரிகை புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட மாடல் அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், காலை உணவு போன்ற திட்டங்களால் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு திட்டத்தையும் பெற்றோர் போல் நான் பார்த்து பார்த்து செய்து வருகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சொல்லி வருகிறார்கள். இவரின் அன்பையும், பாசத்தையும் உணர்ந்த தமிழ்நாட்டு மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அன்போடு ’அப்பா’ என்று அழைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பல்வேறு திட்டங்களால் அவரை தமிழ்நாடு மக்கள் ‘அப்பா' என்று அன்புடன் அழைக்கின்றனர்” என்று ‘ஈ நாடு' தெலுங்கு பத்ரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து 'ஈ நாடு ' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

இந்திய அரசியலில் தமிழ்நாடு அரசியல் வேறுபட்டது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். 1967க்குப் பிறகு தேசிய கட்சிகள் எதனாலும் தமிழ்நாட்டை ஆளமுடியவில்லை. தமிழ்- நாட்டின் ஆளுமைகளை யாரும் பொதுவாக அரசியலில், அரசியல் மேடைகளில் பெயர் அழைக்கும் வழக்கம் இல்லை. அதற்கு பதிலாக அவர்களுக்கே உரிய அங்கீகாரம் பெற்ற பெயர்களை வைத்து மரியாதையுடன் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. உதாரணத்திற்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் போன்று மரியாதைக்குரிய பெயர்களை வைத்து அழைப்பது வழக்கம். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா அவர்களை புரட்சித்தலைவி அம்மா என்று அந்த கட்சியின் தொண்டர்கள் அனைவரும் அழைத்தனர்.

அரசியலில் தளபதி

தி.மு.க. தொண்டர்களின் தளபதியாக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது 'அப்பா' என்று அழைக்கும் அளவிற்கு மக்களிடம் சென்று அடைந்திருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் பள்ளி, கல்லூரிமாணவர்களுக்கு என்று பல பிரத்யேகமான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி உள்ளார். இதனால் மாணவர்கள் முதலமைச்சர் அவர்களை பாசத்துடன் ‘அப்பா’ என்று அழைக்கின்றனர்.

உதாரணத்திற்கு மாணவர்களுக்கான திட்டங்கள் காலைஉணவுத்- திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் மாணவர்களை பயன்பெற வைத்துள்ளது.

இத்தகைய திட்டங்கள் மூலம் மாணவர்களிடம் அன்பை பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அப்பா என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். அவர் ‘அப்பா' என்ற அழைப்பை அன்புடன் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவருகிறது. இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories