தமிழ்நாடு

மகப்பேறு மரணம் பூஜ்ஜியம் ஆக வேண்டும் என்ற இலக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மகப்பேறு மரணம் பூஜ்ஜியம்  ஆக வேண்டும் என்ற இலக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா 2025 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "கடந்த 4 ஆண்டுகளில் மகளிருக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போன்ற திட்டங்கள் இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய திட்டங்களாக உள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா போன்ற மாநில முதல்வர்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடிய மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அந்த மாநிலங்களில் செயல்படுத்துவோம் என்று அறிவித்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்து உள்ளனர்.

மகப்பேறு மரணம் பூஜ்ஜியம்  ஆக வேண்டும் என்ற இலக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியாவிற்கு வழிகாட்டும் திட்டம் தான் மகளிர் உரிமை தொகை திட்டம். மகளிர் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய திட்டம் மகளிர் விடியல் பயணம். இது தொடங்கியது முதல் தற்போது வரை 644 கோடிக்கும் மேலான பயணங்களை பெண்கள் மேற்கொண்டு உள்ளனர்.

சராசரியாக பெண்கள் தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் 57 லட்சம் பயணங்களை மேற்கொள்கின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு 888 ரூபாய் மகளிருக்கு இதனால் மிச்சம் ஆகிறது. இதுபோன்ற திட்டங்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 13 மேயர்கள் பெண்கள். சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 101 மாமன்ற உறுப்பினர்கள் பெண்கள்.

தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு 350 பெண்களுக்கு ஆட்டோக்களை வழங்கினார். இன்னும் 150 பெண்களுக்கு ஆட்டோக்களை வழங்க உள்ளார். இந்தியாவில் உள்ள 4 ஆயிரம் சட்டன்ற தொகுதிகளில் சைதாப்பேட்டை தொகுதியில் தான் 375 பெண்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள் என்ற மகத்தான புரட்சி இந்த சைதாப்பேட்டைக்கு கிடைக்கப் போகிறது.

மகப்பேறு மரணம் பூஜ்ஜியம்  ஆக வேண்டும் என்ற இலக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடந்த 2020-2021 ஆம் ஆண்டு 1 லட்சம் மகப்பேறுகள் நடந்தால் அதில் 73 இறப்புகள் இருந்தது. கொரோனா காலமான 21-22 ஆம் ஆண்டில் இது 90.3 உயர்ந்து, 2022-2023 ஆம் ஆண்டு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகளால் 52-ஆககுறைந்தது, 2023-2024 ஆம் ஆண்டு 45.5-ஆக குறைந்து 2024- 2025 ஆம் ஆண்டு 39 என்ற அளவில் குறைந்து உள்ளது. மகப்பேறு இறப்பு பூஜ்ஜியம் என்ற நிலைமைக்கு வரவேண்டும்.

அதேபோல் சிசு மரணம் விகிதம். 1000 குழந்தைகளுக்கு - 2020 - 2021 ஆம் ஆண்டு 9.7 -ஆகா இருந்தது....

21 - 22 - 10.4

22-23 - 10.2

23 - 24 - 8.2

24 - 25 - கடந்த ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் சிசு மரண விகிதம் 7.7 ஆக குறைந்து உள்ளது. மகப்பேறு மரணம் மற்றும் சிசு மரணத்தில் பூஜ்ஜியம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories