தமிழ்நாடு

நாகப்பட்டினத்தில் ரூ.423.18 கோடியில் முடிவுற்ற பணிகள்... முதலமைச்சர் திறந்து வைத்தார் - விவரம் என்ன?

நாகையில், அரசு விழாவில் ரூ.423.18 கோடி மதிப்பீட்டிலான 35 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 206 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 38,956 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர்

நாகப்பட்டினத்தில் ரூ.423.18 கோடியில் முடிவுற்ற பணிகள்... முதலமைச்சர் திறந்து வைத்தார் - விவரம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.3.2025) நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 139 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் 35 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 82 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 206 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 200 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 38,956 பயனாளிகளுக்கு வழங்கினார்.

=> நாகப்பட்டினம் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள் :

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், நாகப்பட்டினம் நம்பியார் நகரில் 6 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் புயல் பாதுகாப்பு மையம்;

பள்ளிக் கல்வித் துறை சார்பில், கீழ்வேளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் 66 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் செலவில் 3 வகுப்பறைக் கட்டடங்கள்;

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், திருக்கண்ணப்புரத்தில் 5 கோடியே 16 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்;

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் 81 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்ட பணிகள்;

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறில் 3 கோடியே 37 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம், பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டடங்கள்;

பள்ளிக்கல்வித் துறை சார்பில், வேதாரண்யத்தில் 1 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன் முழு நேர கிளை நூலகம், தலைஞாயிறு பேரூராட்சியில் செயல்படும் தலைஞாயிறு கிளை நூலகத்திற்கு 22 இலட்சம் ரூபாய் செலவில் புதிய இணைப்பு கட்டடம்;

பொதுப்பணித்துறை சார்பில், நாகப்பட்டினத்தில் 3 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் சுற்றுலா மாளிகை கட்டடம்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், திருப்பூண்டி மேற்கு, கொட்டாரக்குடி, வடமலைமனைக்காடு, ஆழியூர், தேவூர் ஆகிய ஊராட்சிகளில் 3 கோடியே 36 ஆயிரம் ரூபாய் செலவில் 5 ஆரம்ப, துணை, மற்றும் வட்டார சுகாதார நிலையங்கள்;

புதுப்பள்ளி ஊராட்சியில் சக்கிலியன் வாய்க்கால் குறுக்கே 3 கோடியே 53 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம், வலிவலம் – காருகுடி சாலை வெள்ளையாற்றின் குறுக்கே 2 கோடியே 30 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம், தெற்குபனையூர் பஞ்சாயத்து வல்லவிநாயக கோட்டகம், வெள்ளையாற்றின் குறுக்கே 3 கோடியே 69 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம், திருமருகல் வட்டாரம், வீரமுட்டி மற்றும் திருச்செங்காட்டான்குடி இடையே 1 கோடியே 46 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் வடிகால் அமைத்தல், வேதாரண்யம் வட்டாரம், மேலக்காடு சாலையில் முல்லையாறு மற்றும் தென்னடார் இடையே 1 கோடியே 74 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம், திருமருகல் வட்டாரம், புத்தார் ஆற்றில் வடகரை மற்றும் தென்கரை இடையே 1 கோடியே 89 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம், ஆதனூர் - அகஸ்தியன்பள்ளி முதல் தென்னடார் சாலை, மானங்கொண்டான் ஆற்றின் குறுக்கே 6 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் பாலம், வேதாரண்யம் - வடக்கு மருதூர் முதல் தெற்கு நடேச தேவர்கடை அங்காளம்மன்கோயில் வரையில் 3 கோடியே 85 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம், செம்பியமணக்குடி முதல் கரியாப்பட்டினம் சென்பகராயநல்லூர் சாலையில் 8 கோடியே 16 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் 2 பாலங்கள்;

ஆதனூர் பகுதியில் 22 இலட்சம் ரூபாய் செலவில் பொது நூலகம்; மீனம்பநல்லூர், குரவப்புலம் – நடுக்காடு, பெரியகுத்தகை-குருமுத்தான்காடு, பஞ்சநத்திக்குளம் நடுச்சேத்தி – சிறுதலைக்காடு ஆகிய இடங்களில் 66 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் 4 அங்கன்வாடி மையக் கட்டடங்கள்;

திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி - காமேஸ்வரம், விழுந்தமாவடி ஆகிய இடங்களில் 14 இலட்சம் ரூபாய் செலவில் 2 பயணிகள் நிழற்குடைகள்; கட்டுமாவடி புறா, வடகரை, கொங்கராயநல்லூர் ஆகிய இடங்களில்

70 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் 3 ஊராட்சி மன்றக் கட்டடங்கள்; கருப்பம்புலம் தெற்கு காட்டில் 20 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் பால் கொள்முதல் நிலையம்;

கீழக்கண்ணாபூரில் 33 இலட்சம் ரூபாய் செலவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்;

- என மொத்தம், 139 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் 35 முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

நாகப்பட்டினத்தில் ரூ.423.18 கோடியில் முடிவுற்ற பணிகள்... முதலமைச்சர் திறந்து வைத்தார் - விவரம் என்ன?

=> நாகப்பட்டினம் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள் :

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், நாகப்பட்டினம், கங்களாஞ்சேரியில் 30 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருக்குவளை அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம்;

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய புறநகர் பேருந்து நிலையம், நாகூர் சில்லடி கடற்கரையை 1 கோடியே 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கட்டுமாவடி, திருவாய்மூர், திருப்பூண்டி, அகரஒரத்தூர், புத்தகரம், ஆலத்தூர், சீயாத்தமங்கை, வடகரை, எரவாஞ்சேரி, நெய்குப்பை, கட்டுமாவடி, திருப்புகலூர், நரிமணம், திருச்செங்காட்டாங்குடி, கோட்டூர், திருப்பயத்தங்குடி, கருவேலங்கடை, வடக்குபொய்கைநல்லூர், பிரதாபராமபுரம், உத்தமசோழபுரம், மீனம்பநல்லூர், ஈசனூர், மருங்கூர், செம்பியன்மாதேவி, கொத்தமங்கலம், இடையாத்தங்குடி, சிக்கல், தகட்டூர், சங்கமங்கலம், தேமங்கலம், மஞ்சகொல்லை, ஆழியூர், பொரவச்சேரி, ஐவநல்லூர், அகரகொந்தகை, வாட்டாகுடி, மணக்குடி, மருதூர் வடக்கு, மடப்புரம், செண்பகராயநல்லூர், புட்பவணம், வடகரை, பஞ்சநதிக்குளம் மேற்கு, எரவாஞ்சேரி, திருக்கண்ணபுரம், கீழையூர், நாகக்குடையான், கோடியக்காடு, கீழப்பூதனூர், வடவூர், கருப்பம்புலம், சாட்டியக்குடி, கோடியக்கரை, ஆதமங்கலம், வலிவலம், பொரவாச்சேரி, தகட்டூர் ஆகிய ஊராட்சிகளில் 15 கோடியே 34 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 126 சாலைகள் அமைக்கும் பணிகள்;

திருக்கண்ணபுரம் ஊராட்சி, காக்காமங்கலத்தில் 6 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள்; கொத்தமங்கலம் ஊராட்சி, பத்தம் மாரியம்மன் கோயில் தெரு மற்றும் அனந்தநல்லூர் காலனி ஆகிய இடங்களில் 4 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2 கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள்;

காரையூர், திருப்பயித்தக்குடி, திருச்செங்காட்டாங்குடி, திருப்பூண்டி மேற்கு, சோழவித்யாபுரம், துளசாபுரம், அகரக்கடம்பனுரர், வெள்ளப்பள்ளம், ஐவநல்லூர், ஆந்தக்குடி, இறையான்குடி, விற்குடி ஆகிய இடங்களில் 1 கோடியே 77 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாசன வாய்க்காலில் 17 கல்வெர்ட் அமைக்கும் பணிகள்;

சங்கமங்கலம் – செல்லூர் சாலையில் 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள்; ஏனங்குடி – கருப்பூர், வடக்குவெளி, நாகக்குடையான், ஆயக்காரன்புலம்-3 ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 60 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 6 சுற்றுச்சுவர் கட்டும் பணிகள்;

விழுந்தமாவடி –தென்பாதி மீனவர் காலனி வடக்கு முதல் மற்றும் இரண்டாம் பகுதி, தெற்கு முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பகுதிகளில் 42 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 5 மீன் வலை பின்னும் கட்டடங்கள் அமைக்கும் பணிகள்;

தெத்தி ஊராட்சி, டிடிசி நகரில் 38 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4 தொழிற்கூடங்கள் அமைக்கும் பணிகள்;

வடுகச்சேரி, பாப்பாக்கோயில், கீழபூதனுரர், காரையூர், கோபுராஜபுரம், பனங்குடி, ராராந்திமங்கலம், வடகரை, கொத்தங்குடி, வாய்மேடு, செட்டிப்புலம், நாகக்குடையான், தேத்தாக்குடி வடக்கு, தென்னடார் ஆகிய ஊராட்சிகளில் 2 கோடியே 13 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 17 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள்;

சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறைக் கட்டடங்கள், விழுந்தவாடி மற்றும் ஆயக்காரன்புலம்-2 ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள், போலகம் ஊராட்சியில் 41 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம்;

திருப்பூண்டி வடக்கு, கட்டுமாவடி, மதியகுடி ஆகிய ஊராட்சிகளில் 1 கோடியே 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைக் கட்டடங்கள்;

4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காமேஸ்வரம் நீலக்கொடி கடற்கரை திட்டம் செயல்படுத்துதல், கீழ்வேளூர், பிரதாமராமபுரம், பாங்கல், காரபிடாகை தெற்கு, மீனம்பநல்லூர், திருப்பூண்டி கிழக்கு, வேட்டைகாரண்யிருப்பு, விழுந்தமாவடி, அகரஓரத்தூர், கத்திரிப்புலம், தேதாக்குடி ஆகிய ஊராட்சிகளில் 13 கோடியே 3 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 14 சாலைப் பணிகள்;

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், நாகப்பட்டினம், தெற்கு பொய்கைநல்லூரில் 5 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிராமப்புற ஒருங்கிணைந்த வேளாண் வணிக வளாகம் கட்டும் பணி;

என மொத்தம், 82 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 206 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

நாகப்பட்டினத்தில் ரூ.423.18 கோடியில் முடிவுற்ற பணிகள்... முதலமைச்சர் திறந்து வைத்தார் - விவரம் என்ன?

=> நாகப்பட்டினம் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள் :

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 7447 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள், 1327 பயனாளிகளுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் 1000 பயனாளிகளுக்கு, கலைஞரின் கனவு இல்லத் திட்டம், ஊரக வீடுகள் பழுது நீக்க திட்டங்களின் கீழ் உதவிகள், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டம் சார்பில் 12,627 பயனாளிகளுக்கு ஊரகம் மற்றும் நகர்புறம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1053 பயனாளிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், விதை கிராம திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள், தோட்டக்கலைத் துறை சார்பில் 1028 பயனாளிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் உதவிகள்;

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 164 பயனாளிகளுக்கு, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான திறன்பேசி, சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், சிறப்பு சக்கர நாற்காலி, கார்னர் சீட், முழங்கை ஊன்றுகோல், மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டைகள்;

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 261 பயனாளிகளுக்கு அன்னை தெரசா ஆதரவற்றோர் திருமண உதவித் தொகை திட்டம், விலையில்லா தையல் இயந்திரம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதி உதவித்திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள், கூட்டுறவுத் துறை சார்பில் 6198 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழு கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவிகள்;

நாகப்பட்டினத்தில் ரூ.423.18 கோடியில் முடிவுற்ற பணிகள்... முதலமைச்சர் திறந்து வைத்தார் - விவரம் என்ன?

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 2294 பயனாளிகளுக்கு, திருமண உதவித் தொகை திட்டம், இயற்கை மரண உதவித் தொகை திட்டம், உயர்கல்வித் திட்டம், ஓய்வூதியத் திட்டம், கண்கண்ணாடி உதவித் தொகை போன்ற திட்ட்ங்களின் கீழ் உதவிகள்,

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 144 பயனாளிகளுக்கு, மீனவர் விபத்து குழு காப்புறுதி திட்டம், தமிழ்நாடு மீனவர் நலவாரிய திட்டத்தின் கீழ், இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச் சடங்கு, மீன்பிடிக்கையில் காணாமல் போனது, மீன்பிடிக்கையில் மரணம், கல்வி நிதி பயன், திருமண உதவித் தொகை ஆகிய உதவித் தொகைகள், மாநில நிதியின் கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள், பதிவு செய்யப்பட்டுள்ள மீன்பிடி நாட்டுப்படகுகளுக்கு அரசால் வரி விலக்களிக்கப்பட்ட மானிய எரியெண்ணெய்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 3160 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் 415 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டைகள், என பல்வேறு துறைகளின் சார்பில் 200 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 38,956 பயனாளிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் 105 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

banner

Related Stories

Related Stories