தமிழ்நாடு

பொதுத்தேர்வு எழுதும் 5,606 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 145 சிறைவாசி தேர்வர்கள்... - பள்ளிக்கல்வித்துறை!

பொதுத்தேர்வு எழுதும் 5,606 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 145 சிறைவாசி தேர்வர்கள்... - பள்ளிக்கல்வித்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

2024 - 25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர் மாணவிகளுக்கு பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இந்தத் தேர்வானது மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8,21,057 மாணவ - மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இன்று முதல் நாள் தமிழ்மொழி உள்ளிட்ட விருப்ப மொழிப்பாட தேர்வு நடைபெறுகிறது.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணியில் தேர்வறை கண்காணிப்பாளர்கள் 43,446 பேர் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் தேர்வில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 4470 பறக்கும் படை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுத்தேர்வு எழுதும் 5,606 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 145 சிறைவாசி தேர்வர்கள்... - பள்ளிக்கல்வித்துறை!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சென்னை மாவட்டத்தில் மொத்தம் 65,641 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். 242 தேர்வு மையங்களும் 5 வினாத்தாள் கட்டு காப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 638 மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1:15 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த சூழலில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அரசுச்செயலாளர் சந்திரமோகன், சென்னை மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி, சென்னை மாவட்டத்தின் தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி பழனிச்சாமி உள்ளிட்டோர் அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறையில் சென்று அங்கு ஆய்வு செய்தனர்.

பொதுத்தேர்வு எழுதும் 5,606 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 145 சிறைவாசி தேர்வர்கள்... - பள்ளிக்கல்வித்துறை!

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் பேசியதாவது, “12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 7518 பள்ளிகளில் தொடங்கி வைத்துள்ளோம். 8,21,057 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பொதுத்தேர்வு நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் துறை சார்ந்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

45 தேர்வு கண்காணிப்பு அலுவலர்கள் நியமித்து உள்ளோம். எந்தப் பிரச்சினைகளை ஏற்பட்ட விடக்கூடாது என்பதற்காக 10 மையங்களுக்கு இருவர் என்ற வகையில் ஸ்குவார்ட் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு துறை மூலம் அரசு மருத்துவமனை சான்றிதழ் பெற்று, அதன் அடிப்படையில் ஸ்க்ரைப் மூலம் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்மையாக மாற்றுத்திறனாளிகளாக இல்லாமல் பொய்யாக சான்றிதழ் கொடுத்து ஸ்க்ரைப் மூலம் தேர்வு எழுதுவது கண்டறியப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

5,606 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் பூந்தமல்லி பள்ளியில் முதல் முறையாக கம்ப்யூட்டர் பயன்படுத்தி ஆனந்த் என்ற மாணவர் பொதுத்தேர்வு எழுதுகிறார். அதேபோல் 145 சிறைவாசி தேர்வர்கள் தேர்வு எழுதுகிறார்கள். சென்னை மாவட்டத்தில் 64 ஆயிரத்து 641 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

9498383075 இந்த எண்களை பயன்படுத்தி அரசு தேர்வுகள் இயக்கத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தின் உதவிகளை பெறலாம். கட்டுப்பாட்டு மையங்களில் பிரச்சினை தொடர்பாக அழைப்புகள் வரும்போது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” என்றார்.

banner

Related Stories

Related Stories