
திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது இந்தி திணைப்பை எதிர்ப்போம்,மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.. அணணா வழியில் அயராது உழைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழங்கினார். பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய 105 ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அண்ணா அறிவாலயம் வருகை தந்து கழக தொண்டர்களின் வாழ்த்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று வருகிறார். நீண்ட வரிசையில் நின்று கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அப்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசுகைளை வழங்கினர். அமைச்சர் முத்துசாமி மலைவாழ் மாணவர்களை முதல்முறையாக விமானம் மூலம் அழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








