முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை யானைகவுனியில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், ’மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்னும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் வடிவேலு, விமர்சனங்கள் என்ற பெயரில் எத்தனை பந்துகள் வந்தாலும் அதனை சிக்சராக அடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவம்சம் செய்கிறார். மக்களுக்கு சிறப்பான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.
இந்தியாவிலேயே மிகவும் அருமையான, திறமையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.யார் வேண்டுமானாலும், எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் எந்த மொழியையும் யார் மீதும் திணிக்க கூடாது - தமிழ்நாட்டின் அடையாளம் தமிழ்தான்.
தமிழ்நாட்டில் யாரும் எதையும் திணிக்கவோ, புகுத்தவோ ஒருபோதும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார். 2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க வெல்லும்" என தெரிவித்துள்ளார்.