தமிழ்நாடு

வெளிநாட்டில் வேலை என்று சட்டவிரோத ஆட்சேர்ப்பு... கோவை சரகத்தில் 5 முகவர்கள் அதிரடி கைது!

வெளிநாட்டில் வேலை என்று சட்டவிரோத ஆட்சேர்ப்பு... கோவை சரகத்தில் 5 முகவர்கள் அதிரடி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இதுவரை குற்ற பிரிவு குற்ற புலனாய்வு துறையில் (CBCID சைபர் அடிமைத்தனம் மற்றும் அதன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 54 குற்றவாளிகள் (6 மலேசிய நாட்டினர் உட்பட) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளிநாட்டில் வேலை தேடும் படித்த இளைஞர்கள், சட்டவிரோத ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அனுப்பப்படுகின்றனர்.

அங்கு அவர்கள் இணையவழி மோசடி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இவர்களை, போலியான சமூக ஊடகங்கள் மூலம் அப்பாவி பொதுமக்களை தொடர்பு கொண்டு, பிட் காயின் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் போன்ற போலியான செயலிகளில் முதலீடு செய்ய வைக்கின்றனர். அவர்கள் இணைய மோசடி செய்ய ஒத்துழைக்க மறுத்தால் அவர்களை உடல் அளவிலும் மனதளவிலும் துன்புறுத்துகின்றனர்.

சைபர் அடிமைத்தனம் (Cyber Slavery) குறித்த குற்றங்களை கையாள மற்றும் இக்குற்றங்களை தடுக்க தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின்பேரில் சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் மீது 120(B), 368, 371, 374 & 420 இந்திய தண்டனைச்சட்டம் உஇ பிரிவு 10 & 24 குடியேற்றச்சட்டம் 1983 (Emigration Act 1983) ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்துவருகின்றது.கோவை சரகத்தில் பதியப்பட்ட 3 வழக்குகள் உட்பட மாநிலம் முழுவதும் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் வேலை என்று சட்டவிரோத ஆட்சேர்ப்பு... கோவை சரகத்தில் 5 முகவர்கள் அதிரடி கைது!

கோவை சிபிசிஐடி சரகத்தில் பதிவு செய்யப்பட்ட 3 சைபர் அடிமைத்தனம் (Cyber Slavery) வழக்குகளில் 1) சென்னையை சேர்ந்த பியோலியோராஜ் 2) சென்னையை சேர்ந்த முகமது ஷேக் மீரான் 3) சிவகங்கையை சேர்ந்த கௌதம் 4) திருப்பூரை சேர்ந்த தாமோதரன் மற்றும் 5) விருதுநகரை சேர்ந்த ராஜேஸ் என்ற ராஜதுரை ஆகிய 5 சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, மேற்கண்ட சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள், 18-க்கும் மேற்பட்ட நபர்களை தமிழ்நாட்டில் இருந்து லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளுக்கு சைபர் குற்றம்புரிய சட்டவிரோதமாக அனுப்பியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுவரை குற்ற பிரிவு குற்ற புலனாய்வு துறையில் (CBCID சைபர் அடிமைத்தனம் மற்றும் அதன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 54 குற்றவாளிகள் (6 மலேசிய நாட்டினர் உட்பட) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

லாவோஸ் / கம்போடியாவுக்குச் செல்லவிருந்த 28 பயணிகள் இம்மிகிரேஷன் கவுண்டரில் சைபர் அடிமைத்தனத்தின் அச்சுறுத்தல்கள் குறித்துவிளக்கியதை ஏற்று தானாக முன்வந்து அந்த நாடுகளுக்கு செல்வதை கைவிட்டு வீடு திரும்பினர். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சைபர் அடிமைத்தனம் தொடர்பான வேலை பார்த்து வந்த 16 நபர்கள் மியான்மர் கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories