அரசியல்

மோடியின் ஆட்சி மீது நம்பிக்கை இழக்கும் இந்தியர்கள் - C Voter நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியான தகவல் !

பிரதமர் மோடி ஆட்சியில் தங்கள் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நம்பிக்கையை பெரும்பான்மையான இந்தியர்கள் இழந்துள்ளதாக C Voter நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மோடியின் ஆட்சி மீது நம்பிக்கை இழக்கும் இந்தியர்கள் - C Voter நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியான தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட GST, பணமதிப்பிழப்பு போன்ற பொருளாதார நடவடிக்கைகளால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதோடு ஏராளமான தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

அதோடு நடுத்தர வர்க்கத்தினரின் வருமானத்துக்கு இதனால் பெரும் தேக்கநிலைக்கு சென்றது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அதோடு மோடி அரசின் தவறான பொருளாதார கோட்பாடுகளால் விலைவாசி உயர்வும் கடுமையாக அதிகரித்து வருகிறது.

மோடியின் ஆட்சி மீது நம்பிக்கை இழக்கும் இந்தியர்கள் - C Voter நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியான தகவல் !

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தங்கள் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நம்பிக்கையை பெரும்பான்மையான இந்தியர்கள் இழந்துள்ளதாக C Voter நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு தழுவிய அளவில் 5,269 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் வரும் நிதி ஆண்டில் சாதாரண குடிமக்களின் வாழ்க்கைத் தரம் வரும் நிதியாண்டில் மோசமடைய வாய்ப்புள்ளது என 37% க்கும் அதிகமானோர் கவலை தெரிவித்துள்ளனர். அதே போல மோடி பிரதமரானதிலிருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக மூன்றில் இரண்டு பங்கு பேர் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories