தமிழ்நாடு

2024 ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்கள் என்ன? : முழு விவரம் இங்கே!

விவசாயிகளின் 60 ஆண்டு கனவு 2024 ஆம் ஆண்டு அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்கள் என்ன? : முழு விவரம் இங்கே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசில் 2024 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டட திட்டங்கள் குறித்து சிலவரற்றை இங்கு பார்ப்போம்:-

தமிழ்ப் புதல்வன் திட்டம்!

6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோயம்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர்!

பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை 2023 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதல்கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தை ஜூலை மாதம் தருமபுரியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நீங்கள் நலமா!

பொதுமக்களிடம் தானே நேரடியாக பேசும் "நீங்கள் நலமா" என்ற புதிய திட்டத்தை மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என உறுதி செய்வதற்காக "நீங்கள் நலமா?" திட்டம் செயல்படுத்தப்படுள்ளது.

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்!

கிராமப்புற பகுதிகளிலிருந்து நிறைய திறமையான பல விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் நோக்கில் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்' பிப்ரவரி மாதம் மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்!

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் வறட்சியான பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதனால் விவசாயிகளின் 60 ஆண்டு கனவு நிறைவேறியது.

கலைஞர் கைவினைத்திட்டம்!

சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி "கலைஞர் கைவினைத்திட்டம்" தொடங்கப்பட்டுள்ளது.

புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்!

உயர்கல்வியில் மாணவிகளின் எண்ணைக்கை உயர்த்து வகையில் கொண்டுவரபட்ட புதுமைப் பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் ரூ.1000 வழங்கும் விதமாக தூத்துக்குடியில் டிசம்பவர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

banner

Related Stories

Related Stories