தமிழ்நாடு

சென்னையில் பிரம்மாண்ட மலர்க் கண்காட்சி! : நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4 ஆவது மலர்க் கண்காட்சி நாளை (ஜனவரி 2) தொடங்க உள்ளது.

சென்னையில் பிரம்மாண்ட மலர்க் கண்காட்சி! : நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4 ஆவது மலர்க் கண்காட்சி நாளை (ஜனவரி 2) தொடங்க உள்ளது.

இந்த மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நாளை தொடங்கும் இந்த மலர்க் கண்காட்சி வரும் 11 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

இதனால், சென்னை செம்மொழி பூங்காவில் பூக்களை அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் பிரம்மாண்ட மலர்க் கண்காட்சி! : நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50 வகையான 30 லட்சம் பூச்செடிகளை கொண்ட மலர் தொட்டிகள் எடுத்து வரப்பட்டு அதனை ஓவ்வொரு இடத்திலும் அலங்கரிக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்த மலர் கண்காட்சியில் பூக்களால் செய்யப்பட்ட முதலை, யானை, பட்டாம் பூச்சி, தொடர்வண்டி, அன்னபறவை, மிக்கி மவுஸ், படகு, கார் உள்ளிட்டவைகள் இடம்பெறுகிறது.

இந்நிலையில், மலைப் பகுதிகள் காணக்கூடிய மலர்க் கண்காட்சியை சென்னையில் காண, மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories