தமிழ்நாடு

சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய IATA பயிற்சி! : ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு புதிய அறிவிப்பு!

சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய IATA பயிற்சி! : ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு புதிய அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கிவருகிறது.

அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வ தேசவிமான போக்குவரத்தால் (IATA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய யணிகள் சேவை அடிப்படை படிப்பு (Air Cargo Introductory+ DGR)சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்பு (Passenger Ground Services+ Reservation Ticketing) சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமானபயணமுன்பதிவு (Foundation in Travel and Tourism) போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 18 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினசார்ந்தவர்களாக இருக்க வேண்டும், இப்பயிற்சிக்கான கால அளவு ஆறுமாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையான ரூ.95,000/-த்தை தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.

சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய IATA பயிற்சி! : ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு புதிய அறிவிப்பு!
vajiram and ravi

இப்பயிற்சியினைவெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் IATA-International Air Transport Association-Canda மூலம் அங்கீரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தனியார் விமான நிறுவனங்களிலும் (Indigo, Airlines,Spice Jet, Go First, Air India), சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திரவிடுதிகளிலும், சொகுசுகப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலை வாய்ப்பு பெறலாம். ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாகரூ.20,000/- முதல் ரூ.22,000/- வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும், பின்னர் திறமைக் கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில்ரூ.50,000/- முதல் ரூ.70,000/- ஊதிய உயர்வு பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் 55 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு முதற்கட்டமாக 46நபர்கள் முன்னனி விமான நிறுவனங்கள் மற்றும் சேவைமையங்களானIndigo, Air India, Menzies, Bird Aviation, Hyundai, iGo Tours, Wings vacation, Zenith Tours, Alhind Tours & Money Exchange போன்றவைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories