தமிழ்நாடு

வைக்கம் 100 : தமிழ்நாடு அரசின் ‘வைக்கம் விருதை’ பெற்றார் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவநூர மஹாதேவா!

கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான தேவநூர மஹாதேவா அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான 'வைக்கம் விருது' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது.

வைக்கம் 100 : தமிழ்நாடு அரசின் ‘வைக்கம் விருதை’ பெற்றார் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவநூர மஹாதேவா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளாவின் வேகத்தில் ஆலய நுழைவு போராட்டமான 'வைக்கம் போராட்டம்' இன்று வரை தென்னிந்திய மக்களால் நினைவு கூறப்படுகிறது. 30 மார்ச் 1924 அன்று வைக்கம் போராட்டம் தொடங்கியது. வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த போராட்டம்தான் 'வைக்கம் போராட்டம்' ஆகும்.

இந்த போராட்டத்தில் பங்கெடுத்த போராட்டக்காரர்கள் சிறை தண்டனை பெற்றதையடுத்து, அங்கிருந்தவர்கள் தந்தை பெரியாரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ஏப்ரல் 13 அன்று வைக்கம் விரைந்த பெரியார், இந்த போராட்டத்தை வழிநடத்தினார். கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த போராட்டத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார்.தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து போராட்டத்தில் பலரும் கலந்துகொண்டதால் போராட்டம் மிகத் தீவிரமாகிறது.

வைக்கம் 100 : தமிழ்நாடு அரசின் ‘வைக்கம் விருதை’ பெற்றார் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவநூர மஹாதேவா!

இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், மற்ற மாநிலத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும், மாற்று மதத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும் காந்தி கட்டுப்பாடுகள் விதிக்கிறார். ஆனால் அதனை சத்தியாக்கிரகிகள் ஏற்கவில்லை. கோட்டயம் மாவட்டத்துக்கு நுழைய பெரியாருக்கு தடை விதிக்கப்பட்டது. அதை மீறிச் சென்றார், கைது செய்யப்பட்டார்.

மே 22 ஆம் தேதி கைதான பெரியார் ஜூன் 21 விடுதலை செய்யப்பட்டார். வெளியில் வந்தவர், மீண்டும் போராடினார். ஜூலை 18 அன்று இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார் பெரியார். ஆகஸ்ட் 31 விடுதலை செய்யப்பட்டார். 1925 ஆம் ஆண்டு காந்தியடிகள் வைக்கம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். 1925 மார்ச் 18 தடைகள் நீக்கப்பட்டு சாலைகள் திறந்து விடப்பட்டது. இதுதான் வைக்கம் போராட்டச் சுருக்கம் ஆகும்.

வைக்கம் போராட்ட ( 1924 - 25) காலத்தில் 114 நாட்கள் பெரியார் அங்கு இருந்திருக்கிறார். இரண்டு முறை கைது செய்யப்பட்டு மொத்தம் 74 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில் இந்த ஆண்டு வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு ஆகும்.

வைக்கம் 100 : தமிழ்நாடு அரசின் ‘வைக்கம் விருதை’ பெற்றார் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவநூர மஹாதேவா!

இந்த நிலையில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (டிச.12) கேரளா மாநிலம் வைக்கத்தில் நடைபெற்றது. இத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வைக்கம் 100 : தமிழ்நாடு அரசின் ‘வைக்கம் விருதை’ பெற்றார் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவநூர மஹாதேவா!

இந்த நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம், நூலகம், அருங்காட்சியகத்தை முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் திறந்து வைத்து பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான தேவநூர மஹாதேவா அவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருதோடு சேர்த்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

வைக்கம் 100 : தமிழ்நாடு அரசின் ‘வைக்கம் விருதை’ பெற்றார் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவநூர மஹாதேவா!

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவா அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவநூர மஹாதேவா அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஶ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது இவருக்கு 'வைக்கம் விருது' வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 30.03.2023 அன்று சட்டமன்றப் பேரவையில், எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று சட்டமன்றப் பேரவை விதி 110-இன்கீழ் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories