மதுரையில் 1013 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.108 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வங்கிக் கடனை வழங்கினார்.
பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,“ நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி என்பது திராவிட மாடல் அரசுக்கு மக்கள் அளித்த நற்சான்றாகும். அதனால்தான் அரசின் சேவைகளை தேடி போய் பெற்றுக்கொண்ட காலம் மாறி, மக்களைத் தேடி வந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்ய பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் முதலமைச்சர் மு,க.ஸ்டாலின். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடந்த ஆண்டு ரூ.30,075 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.35,000 கோடி வங்கிக்கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு உங்களுக்கு கொடுத்திருப்பது வெறும் கடன் தொகை மட்டும் கிடையாது. அதை உங்கள் உழைப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தொகையாகதான் முதலமைச்சர் அவர்கள் பார்க்கிறார்கள். வங்கிக்கடன் இணைப்பை பெற்றுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் பெரும் தொழில் முனைவோராக உருவாகி, நாலு பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது. உயர்கல்வி சேருகிற மாணவர்களின் சராசரி தமிழ்நாட்டில் தான் அதிகாரித்து, இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சிறந்த உயர்கல்வி நிறுனங்களைக் கொண்ட நம்பர் 1 மாநிலமும் தமிழ்நாடுதான்.
அரசுப்பள்ளியில் படித்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் IIT, NIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வருகிறார்கள். ISRO, Sillcon Vally போன்றவற்றில் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இந்தியாவிலேயே சிறந்த பாடத்தைக் கொண்ட நம் தமிழ்நாடுக் கல்விமுறைதான். பகுத்தறிவோட கேள்வி கேட்க கற்றுக்கொடுக்கும் தமிழ்நாட்டு கல்விமுறை, சிலருக்கு கண்னை உறுத்தது.” என தெரிவித்துள்ளார்.