தமிழ்நாடு

“நடப்பாண்டில் 10 ஆயிரம் பேருக்கு அரசுப்பணி நியமனம்!” : TNPSC தலைவர் பிரபாகர் பேட்டி!

TNPSC குரூப் 4 தேர்வு, தமிழ்நாட்டின் 4,922 மையங்களிலும், குறிப்பாக சென்னையில் 311 மையங்களிலும் நடைபெறுகிறது.

“நடப்பாண்டில் 10 ஆயிரம் பேருக்கு அரசுப்பணி நியமனம்!” : TNPSC தலைவர் பிரபாகர் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 தேர்வுகள் இன்று (ஜூலை 12) நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில்,

“தமிழ்நாட்டில் TNPSC குரூப்-4 தேர்வு இன்று (ஜூலை 12) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 4 தேர்வு, தமிழ்நாட்டின் 4,922 மையங்களிலும், குறிப்பாக சென்னையில் 311 மையங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக இந்த தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 3 ஆயிரத்து 935 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் அடுத்த மூன்று மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

“நடப்பாண்டில் 10 ஆயிரம் பேருக்கு அரசுப்பணி நியமனம்!” : TNPSC தலைவர் பிரபாகர் பேட்டி!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இந்த ஆண்டு மொத்தமாக 10 ஆயிரம் தேர்வாளர்கள், தேர்வு செய்யப்பட்டு அரசு பணியில் அமர்த்தப்படுவதற்கான திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 7 தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, 5 தேர்வுகள் தற்போது வரை நடைபெற்றுள்ளன. எழுத்து தேர்வுகள் இல்லாத தேர்வில் விடைத்தாள்கள் அனைத்தையும் கணினி திருத்தம் செய்கிறது. அதனால் மிகவும் விரைவாக முடிவுகளை வெளியிட முடியும்.

மேலும் மதிப்பெண்களில் மாணவர்களுக்கு ஏதாவது மாறுபட்ட கருத்து இருந்தால், மாணவர்கள் இது தொடர்பான புகார்களை கணினிமயமாக தெரிவிக்கலாம். தொடர் நடவடிக்கைகளால், விடைத்தாள் திருத்துவதில் தவறு நிகழாமல் தவிர்க்கப்பட்டு வருகிறது.

தேர்வாணையம் சார்பில் நடத்தப்படக்கூடிய தேர்வுகள் அனைத்திலும் விடைத்தாள் மற்றும் வினாத்தாள் ஆகிய இரண்டுமே சீல் வைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. குறிப்பாக 100 கேள்விகளை அடிப்படையாக வைத்து இந்த தேர்வு நடைபெறுகிறது.”

banner

Related Stories

Related Stories