தமிழ்நாடு

500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 118.52 கோடி கடன் உதவி : அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்!

அரசு சார்பில் சென்னையில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 118.52 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கினார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 118.52 கோடி கடன் உதவி :  அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

திராவிட மாடல் ஆட்சிக்கு பின், உழைக்கும் மக்களுக்கு உதவும் வகையில் பல திட்டங்கள் தீட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2,735 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் சர்.பி.டி தியாகராயர் அரங்கில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கயல்விழி செல்வராஜ், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தென் சென்னை நாடளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சென்னை மேயர் பிரியா, சட்ட மன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு, பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 118.52 கோடி கடன் உதவி :  அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்!

இந்நிகழ்வில் மகளிர் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் சென்னை மாவட்டத்தின் 1,264 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்களில் உள்ள 15,168 உறுப்பினர்களுக்கு ரூபாய் 96.28 கோடியும், 27 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூபாய் 22.24 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 118.52 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களால் வழங்கப்பட்டது

இந்த கடன் உதவியை மகளிர் சுய உதவிக் குழுக்களின் தலைவி மற்றும் துணைத் தலைவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

banner

Related Stories

Related Stories