தமிழ்நாடு

சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து : பா.ஜ.க நிர்வாகி அதிரடி கைது!

சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்தை பரப்பிய பா.ஜ.க நிர்வாகியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து : பா.ஜ.க நிர்வாகி அதிரடி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.கவில் மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் சௌதாமணி. இவர் தனது சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் நடக்காத ஒன்றை நடந்ததுபோலவும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அண்மையில், பள்ளி சீருடையில் மாணவிகள் சிலர் மரு அருத்துவரது போன்ற வீடியோவை வெளியிட்டு, வேண்டும் என்றே தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார்.

இதையடுத்து, வேண்டும் என்றே தமிழ்நாடு அரசு மீது அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ வெளியிட்டு பா.ஜ.க நிர்வாகி சௌதாமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்ஏ.கே.அருண் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சென்னையில் இருந்த செளவதா மணியை கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories