தமிழ்நாடு

”நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை” : திருச்சி சிவா MP குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

”நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை” :  திருச்சி சிவா MP குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன 31-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அடுத்த நாள் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். இடைக்கால பட்ஜெட்டில் வேண்டுமென்றே தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் உப்புசப்பில்லாத பட்ஜெட் இது என்றும் விமர்சனங்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து கேரளா, தமிழ்நாடு, கர்நாடக ஆகிய மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டங்களையும் மேற்கொண்டது. எனினும் நாடாளுமன்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் இதுகுறித்து பெரிதாக விவாதிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளான இன்று, அயோத்தி இராமர் கோயில் திறப்பு குறித்து விவாதிக்க இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக தமிழ்நாட்டு மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், எனவே இந்த சம்பவம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்றும் மக்களவையில் திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

”நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை” :  திருச்சி சிவா MP குற்றச்சாட்டு!

ஆனால் இதற்கு சபாநாயகர் கூறி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிய அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். அதேபோல் மாநிலங்களவையிலும் புயல், வெள்ள நிவாரண நிதி வழங்காததை கண்டித்தும் ஒன்றிய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, "நாடாளுமன்றத்தை ஒருநாள் கூடுதலாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. அலுவல் ஆய்வுக்குழு எதிர்க்கட்சிகளுக்கு எந்த தகவலும் அளிக்காதது இதுவரை நடைபெறாத ஒன்று. வெள்ளை அறிக்கை குறித்தும், ராமர் கோவில் திறப்பு விழா குறித்து இன்று ஒரே நாளில் இரண்டு விவாதம் நடத்தப்பட்டது. .விதிமுறைகளை மீறி ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடக்கப்படுகிறார்கள் எனவும், குறிப்பாக விவாதங்களின் போது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 3 நிமிடம், திமுகவிற்கு 6 நிமிடம், காங்கிரஸ் கட்சிக்கு 19 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சருக்கு அதிக நேரம் வழங்கப்படுகிறது. பா.ஜ.க மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தால் நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும். நாட்டு நலன் கருதி வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories