தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தல் : ஜன 24 முதல் பிப் 5 வரை மாவட்ட வாரியாக தி.மு.க ஆலோசனை கூட்டம்.. முழு விவரம் !

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகழக மாவட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம் வரும் ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும்.

நாடாளுமன்ற தேர்தல் : ஜன 24 முதல் பிப் 5 வரை மாவட்ட வாரியாக தி.மு.க ஆலோசனை கூட்டம்.. முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையிடலுக்கான குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவலாயத்தில் நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வரும் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டத்தின் வரும் ஜனவரி 24-ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின் வருமாறு :

“தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கூட்டம், நேற்று (22-01-2024) மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தல் : ஜன 24 முதல் பிப் 5 வரை மாவட்ட வாரியாக தி.மு.க ஆலோசனை கூட்டம்.. முழு விவரம் !

ஜனவரி-21 அன்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் எழுச்சியுரையாற்றும்போது தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட/ பகுதி/ ஒன்றிய/ நகர/ பேரூர் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் நகர்மன்றத் தலைவர்கள், தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட "நிர்வாகிகள் சந்திப்பு" கீழ்க்கண்ட அட்டவணைப்படி. சென்னை, அண்ணா சாலை, "அண்ணா அறிவாலயத்தில்" நடைபெறும்.

24.01.2024 - கிருஷ்ணகிரி, திருவள்ளூர்

27.01.2024 - பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர்

28.01.2024 - நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி

29.01.2024 - சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி

30.01.2024 - தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி

31.01.2024 - இராமநாதபுரம், கடலூர்,

01.02.2024 - சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர்,

02.02.2024 - வேலூர், அரக்கோணம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி

03.02.2024 - வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, திருபெரும்புதூர்

04.02.2024 - திருவண்ணாமலை, ஆரணி, பெரம்பலூர், திருச்சி

05.02.2024 - கரூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், புதுச்சேரி”

banner

Related Stories

Related Stories