
சென்னையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் தாமு என்கிற முனைவர் கே.தாமோதரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்.25) உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமையல் கலைஞர் தாமு இன்று காலை உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2010-ஆம் ஆண்டு டிசம்பரில், 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 நொடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார் தாமு.
சமையல் கலையில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பின் காரணமாக, 2025ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவர், திரைப்படங்களில் சிறப்புத் தோற்றங்கள் என பல்துறை செயற்பாட்டாளராக தாமு திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






