
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் திமுக விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களின் இல்லத் திருமண விழா நடைபெற்றது.
இதற்கு தலைமையேற்று, திருமணத்தை நடத்திவைத்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு,
“கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களுக்கென்று நீண்ட, நெடிய தனி அரசியல் அடையாளம் உண்டு. 1977-ல் தொடங்கி, தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றும் ஆற்றலைப் பெற்றவர் அவர். தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆர் மற்றும் என் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக செயல்பட்ட பெருமைக்குரியவர்.
திராவிட மாடல் ஆட்சியில் பட்டா வழங்கும் பணியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.

வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, நம் ஆட்சியில் 23.56 இலட்சத்திற்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்த சாதனையை நிகழ்த்தியது இந்தியாவிலேயே நம் மாநிலம் மட்டும்தான்.
ஆனால், தமிழ்நாட்டில் இன்றைக்கு த.வெ.க.விற்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பக்கூடிய நிலைதான் இருக்கிறது.
விலைவாசி உயர்வு ஒருபுறம், நிர்வாக சீர்கேடு மறுபுறம், இவைத்தவிர பாலியல் குற்றங்கள், கொலை - கொள்ளை என்ற செய்திகள் இல்லாத நாட்களே இல்லை.

கடந்த சில நாட்களாக குழந்தைகள் மாயமாகி வருகின்றனர். த.வெ.க ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படையைக் காப்பாற்றவே, மற்றொரு படையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமையா? இல்லை போதை நடமாட்டமா? என்பதாகத்தான் இன்றைய த.வெ.க ஆட்சி நடந்து வருகிறது. உண்மையான தீயசக்தி யார் என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.”






