தமிழ்நாடு

இரவில் மணல் கடத்தல் : பொதுமக்களிடம் கையும் களவுமாகப் பிடிபட்ட அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்!

சேலத்தில் மணல் கடத்திய அ.தி.மு.க ஒன்றிய செயலாளரைப் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இரவில் மணல் கடத்தல் : பொதுமக்களிடம் கையும் களவுமாகப் பிடிபட்ட அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர் பட்டி பகுதியில் உள்ள சிவந்தனூர் என்ற பகுதியில் ஏரி மற்றும் அரசு புறம் போக்கு நிலங்களிலிருந்து இரவு நேரங்களில் லாரிகளில் மண் கடத்துவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், தாரமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான காங்கேயன் அனுமதியோடு இரவு நேரங்களில் மணல் கடத்தப்பட்டு வந்துள்ளது.

இதனை அறிந்து கொண்ட பொதுமக்கள், மணல் கடத்தி சென்ற லாரியை தடுத்து நிறுத்திச் சிறைபிடித்தனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் காங்கேயன் பொதுமக்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அப்பகுதி இளைஞர்கள் காங்கேயத்திடம் சரமாரியாக கேள்விளை கேட்டுள்ளனர்.

இதனால் இங்கு இருந்தால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்து கொண்ட காங்கேயன் தப்பித்தால் போதும் என்றும் ஓட்டமெடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மண் கடத்தலை தடுக்கச் சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் காங்கேயன் மீது பல இடங்களில் மண் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories