உலகம்

“கிரீன்லாந்து விற்கப்படுவதற்கான சொத்து அல்ல; அது மக்களின் உரிமை”: ட்ரம்ப்-க்கு டென்மார்க் பிரதமர் பதிலடி!

“கிரீன்லாந்து விற்கப்படுவதற்கான சொத்து அல்ல; அது மக்களின் உரிமை” என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

“கிரீன்லாந்து விற்கப்படுவதற்கான சொத்து அல்ல; அது மக்களின் உரிமை”: ட்ரம்ப்-க்கு டென்மார்க் பிரதமர் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கருத்துகள் உலக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆர்க்டிக் பகுதியில் சீனா-ரஷ்யா நடவடிக்கைகள் அதிகரித்துவரும் சூழலில், கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு அவசியமானது என ட்ரம்ப் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, அந்தத் தீவை அமெரிக்கா கைப்பற்றுவது அல்லது தன்னுடன் இணைப்பது குறித்த அவரது கருத்துகள் சர்வதேச அளவில் எதிர்ப்பை சந்தித்துள்ளன.

இதற்கு பதிலளித்த டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், “கிரீன்லாந்து டென்மார்க்கிற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ சொந்தமானது அல்ல; அங்கு வாழும் மக்களுக்கே அது சொந்தம்மாகும். ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலப்பரப்பை பலவந்தமாக கைப்பற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அமெரிக்கா கிரீன்லாந்தை தாக்கவோ அல்லது கைப்பற்றவோ முயன்றால், அது நேட்டோ (NATO) கூட்டமைப்பின் அடிப்படை நம்பிக்கையையே சிதைக்கும்; அத்துடன் அந்த அமைப்பின் முடிவுக்கே வழிவகுக்கும்” என்று தெரிவித்தார். இந்த கருத்து ஐரோப்பிய அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கிரீன்லாந்து விற்கப்படுவதற்கான சொத்து அல்ல; அது மக்களின் உரிமை”: ட்ரம்ப்-க்கு டென்மார்க் பிரதமர் பதிலடி!

இந்த விவகாரத்தில் கிரீன்லாந்தின் அரசும் டென்மார்க்கின் நிலைப்பாட்டையே உறுதிப்படுத்தியுள்ளது. கிரீன்லாந்தின் பிரதமர், “எங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க எங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது” என்று கூறி, எந்தவிதமான வெளிநாட்டு அழுத்தத்தையும் நிராகரித்துள்ளார்.

இதற்கிடையே, பல ஐரோப்பிய நாடுகள் டென்மார்க்குக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், கிரீன்லாந்தின் சுயநிர்ணய உரிமையை மதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. சர்வதேச சட்டம் மற்றும் நாடுகளின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுநிலையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்க்டிக் பகுதி வளங்கள், பாதுகாப்பு மற்றும் வர்த்தக பாதைகள் காரணமாக உலக அரசியலில் முக்கியத்துவம் பெறும் சூழலில், இந்த கிரீன்லாந்து விவகாரம் அமெரிக்கா–ஐரோப்பா உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories