தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!

திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் வழக்கு -
தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ”திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது. தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்.

இதுவரை இல்லாத ஒரு பழக்கத்தை வழக்கத்தை நீதிமன்றத்தின் தீர்ப்பும் மூலம் உள்ளே நுழைப்பது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. இது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான ஒன்று.

எதற்காக இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்து தமிழ்நாட்டில் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்பது தான் எங்களின் கேள்வி. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர எங்களுக்கு முழு உரிமை உண்டு. தமிழ்நாட்டில் மக்கள் மதக்கலவரத்தை உருவாக்க பா.ஜ.க முயற்சித்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories