தமிழ்நாடு

“விரைவில் தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்...” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அசத்தல் அறிவிப்பு !

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலை. அமைக்கவும், திருச்சியில் சித்த மருத்துவத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய இணை அமைச்சரிடம் அமைச்சர் மா.சு கோரிக்கை .

“விரைவில் தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்...” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அசத்தல் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை பள்ளிக்கரணையில் ' கேப்டன் சீனிவாசமூர்த்தி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் வைர விழா நிகழ்ச்சியில் ஆயுஷ் மருத்துவத்துறைக்கான ஒன்றிய இணை அமைச்சர் முன்ஞ்பாரா மகேந்திரபாய் மற்றும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், “இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன. 7 இந்திய மருத்துவத்துறைக் கல்லூரிகள் , 43 தனியார் இந்திய மருத்துவக் கல்லூரிகள் என இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 50 இடங்களில் இந்திய மருத்துவத்துறைக்கு தொடர்புடைய கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

“விரைவில் தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்...” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அசத்தல் அறிவிப்பு !

கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்தபோது தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையமும், வாணியம்பாடியில் யுனானி கொரோனா சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டில் ஒன்றிய அரசிடம் சுகாதாரத்துறைக்கு நிதி கேட்கும்போதெல்லாம் கொஞ்சமும் தாமதம் இல்லாமல் நாங்கள் கேட்கும் நிதியை தருவது மகிழ்ச்சி தருகிறது.

மதுரை AIIMS மருத்துவக் கல்லூரி அமையவுள்ள பகுதிக்கு அருகே, ஒன்றிய அரசின் நிதி உதவியில் ஆயுர்வேதக் கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தியுள்ளார்.

“விரைவில் தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்...” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அசத்தல் அறிவிப்பு !

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் என தொழிற்சாலைகளுக்கு சென்று தொழிலாளர்களுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட உள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை இணை அமைச்சரும் சித்த மருத்துவ வளர்ச்சிக்கு சிறப்பாக உழைத்து வருகின்றனர். அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவர் என்று நம்புகிறோம்.

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலை. அமைக்கப்பட வேண்டும் என்று மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாவும் ஆளுநரிடம் கிடப்பில் உள்ளது. எனவே ஒன்றிய அரசு இந்த விசயத்தில் தலையிட்டு தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலை. அமைய உறுதுணையாக இருக்க வேண்டும். சித்த மருத்துவத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனையை திருச்சியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஒன்றிய அரசு நிறைவேற்றி தர வேண்டும்” என்றார்.

banner

Related Stories

Related Stories