தமிழ்நாடு

“ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வேறு வேலையே கிடையாது..” - அமைச்சர் சேகர்பாபு தாக்கு !

இஸ்லாமியர்களுக்கும் திமுகவுக்கும் இருப்பது தொப்புள் கொடி உறவு என்று அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்துள்ளார்.

“ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வேறு வேலையே கிடையாது..” - அமைச்சர் சேகர்பாபு தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை மன்னடியில் உள்ள காளிகாம்பாள் திருக்கோவிலில் 108 பெண் பக்தைகள் கலந்து கொண்ட பௌர்ணமி திருவிளக்கு நேற்று பூஜை நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு இஸ்லாமியர்களுக்கும் திமுகவினருக்கும் உள்ள உறவு தொப்புள் கொடி உறவு என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அம்மன் வழிபாடு செய்கின்ற பக்தர்கள் பௌர்ணமி தினத்தில் பக்தி பரவசோடு திருவிளக்கு பூஜை செய்ய வேண்டும். கடந்த 2022 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட 12 கோயில்களுக்கு திருவிளக்கு பூஜை அறிவிக்கப்பட்து. பூஜைக்கான செலவில் 4 இல் ஒருபங்கை மட்டுமே பக்தர்களிடம் வாங்கப்பட்டது. மற்ற பங்குகள் கோயிலின் சார்பில் வழங்கப்பட்டது.

“ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வேறு வேலையே கிடையாது..” - அமைச்சர் சேகர்பாபு தாக்கு !

தற்போது நடந்த பூஜை 16 கோயிலின் பூஜையாகும். கடந்த மே மாதம் 5 ஆம் தேதி அன்று திருவொற்றியூர் தியாகராய வடிவுடையம்மன் கோயில் தொடங்கி வைக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக 17 திருக்கோயில்களில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. 21,492 பெண்கள் இதுவரை இதில் கலந்து கொண்டுள்ளனர்.”

தொடர்ந்து சனாதனத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை பிளவுப்படுத்த பார்ப்பதாக ஆளுநர் கூறிய கருத்து குறித்து கேள்விக்கு, “ஆளுநருக்கு வேறு வேலை ஏதும் கிடையாது. வெகுவிரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதையடுத்து ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற ஒன்றிய அரசிற்கு ஆளுநர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

“ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வேறு வேலையே கிடையாது..” - அமைச்சர் சேகர்பாபு தாக்கு !

யாரும் தாக்கி தகர்க்க முடியாத பலம் வாய்ந்த கோட்டைதான் திமுக. பேருந்தில் பெண்கள் இலவச பயணம், மகளிர் குழுக்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை மற்றும் மகளிர் உரிமை தொகை என பல்வேறு மகத்தான திட்டங்களால் திமுகவின் வாக்குவங்கி உயர்ந்து கொண்டே இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

மக்கள் பணி செய்வது, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது போன்றவைகளால் திமுக வாக்கு வங்கி உயர்ந்து கொண்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கும் திமுகவினருக்கும் உள்ள உறவு தொப்புள் கொடி உறவு. அதனால் வாக்கு வங்கி என்றும் சரியாது” என்றார்.

banner

Related Stories

Related Stories