
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு மரியாதை செலுத்தத் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி சென்றார்.
அப்போது “அமைச்சருக்குப் பிறகே செல்ல வேண்டும்” எனக் காவல்துறை, அம்மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் பாராமல் அவரை இடைமறித்துத் தடுத்து நிறுத்தி அராஜகத்துடன் நடந்துகொண்டது.
பின்னர் கனிமொழி எம்.பி தனது காரிலிருந்து இறங்கிச் சுமார் 500 மீட்டர் நடந்து சென்று, அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் காவல்துறையினரின் இந்த அராஜகப் போக்கிற்குத் திமுக மகளிர் அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதில், ”இது தான் அரசியல் மாண்பா?
குறிப்பிட்ட நேரத்திற்கு வருவது த.வெ.க அகராதியில் இல்லை போல.
த.வெ.க தலைவர் எவ்வழியோ த.வெ.க அமைச்சர்களும் அவ்வழியே!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காட்டலங்குளத்தில் இன்று நடைபெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.யை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள்.
குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றும் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் , காரில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்தே சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தவெக அமைச்சர்கள் முதலில் மரியாதை செலுத்திய பிறகே கனிமொழி கருணாநிதி மரியாதை செலுத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிப்பது தவெக அரசின் அடக்குமுறையை காட்டுகிறது
இந்த சலசப்புக்கு அஞ்சாத அக்கா கனிமொழி எம்பி , நான் நடந்தே செல்கிறேன் என்று கூறி நடந்து சென்று மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்" என தெரிவித்துள்ளது.






