தமிழ்நாடு

நிலவைத் தொட்ட 'சந்திரயான் 3' : இந்தியாவின் சாதனைக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த தமிழ்நாடு.. விவரம் உள்ளே !

'சந்திரயான் 3' சாதனையில் தமிழ்நாட்டின் பங்கும் பெரிய அளவில் இருப்பது தமிழ்நாட்டுக்கு பெரும் பெருமையை பெற்றுக்கொடுத்துள்ளது.

நிலவைத் தொட்ட 'சந்திரயான் 3' : இந்தியாவின் சாதனைக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த தமிழ்நாடு.. விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரண் லேண்டர் இன்று மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமான நிலவில்தரையிறக்கப்பட்டது. இதனை இஸ்ரோ மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆரவாரத்தோடு கொண்டாடினர்.

இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த நாடு என்ற பெருமையை இந்தியா படைத்துள்ளது. அதே நேரம் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடு என்ற பெருமையையும் இந்தியா படைத்துள்ளது.

தற்போது விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியதால் எழுந்த தூசுகள் முழுவதுமாக நீங்கியபின்னர் விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வரும். அது எடுக்கும் முதல் புகைப்படத்தை இஸ்ரோ பின்னர் வெளியிடும். இந்தியாவின் இந்த சாதனைக்கு உலகத்தின் பல்வேறு ஆய்வாளர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நிலவைத் தொட்ட 'சந்திரயான் 3' : இந்தியாவின் சாதனைக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த தமிழ்நாடு.. விவரம் உள்ளே !

இந்த பெருமைகரமான சாதனையில் தமிழ்நாட்டின் பங்கும் பெரிய அளவில் இருப்பது தமிழ்நாட்டுக்கு பெரும் பெருமையை பெற்றுக்கொடுத்துள்ளது. சந்திரயான் 1 திட்டத்தில் திட்ட இயக்குனராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை இந்த திட்டத்தில் பெரும்பங்காற்றினார்.

அதனைத்தொடர்ந்து சந்திரயான் 2 திட்டத்தை தயாரித்த இரண்டு பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் வனிதா முத்தையா ஆவார்.மேலும் சந்திரயான் 2 திட்டத்தின்போது இஸ்ரோவின் தலைவராக செயல்பட்டு இந்த திட்டத்தையே வழிநடத்திய சிவன் தமிழ்நாட்டை சேர்ந்தவராவார்.

தற்போது சந்திரயான் 3 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டு வெற்றிகரமாக திட்டத்தை நிறைவேற்றிக்கொடுத்துள்ளார். இவ்வாறு இந்தியாவின் மூன்று முக்கிய திட்டங்களிலும் தமிழர்கள் மிக முக்கிய பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது சந்திரயான் திட்ட பணிகளில் தமிழ்நாட்டின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையும் பெரும் பங்காற்றியுள்ளது தமிழ்நாட்டுக்கு மற்றொரு பெருமையை ஏற்படுத்தியுள்ளது. 'சந்திரயான் விண்கலம் மற்றும் லேண்டர், ரோவர் சாதனங்களில், கோவையை சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சந்திரயான்- 3 விண்கலனின் பல்வேறு முக்கிய பாகங்கள் தமிழ்நாட்டினை கோயம்புத்தூரில் உள்ள சக்ரதாரா ஏரோஸ்பேஸ் அண்ட் கார்கோ பிரைவேட் லிமிடெட் ( லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் ) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக லிக்விட் புரபல்சன் சிஸ்டம், திரஸ்ட் வால்வுகள், சி.இ.,20 இன்ஜினில் பொருத்தப்பட்டுள்ள 130 பிரஷர் டிரான்ஸ் டியூசர்கள் ஆகியவை கோயம்புத்தூரில் இருந்து சென்ற தயாரிப்பு பொருட்களாகும். மேலும் ஜி.டி.என்., மற்றும் 'எல் அண்டு டி' நிறுவனங்களின் தயாரிப்புகளும் 'சந்திரயான்-3 திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனைக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ”தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை இந்தியாவின் முக்கியமான திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கை வகித்துள்ளது பெரும் ஊக்கம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories