தமிழ்நாடு

பைக் ரேஸில் மீண்டும் அதிர்ச்சி.. கழன்று விழுந்த Helmet.. தலையில் அடிபட்டு 13 வயது சிறுவனுக்கு சோகம் !

பெங்களூரை சேர்ந்த ஸ்ரேயாஸ் ஹரீஷ் (13) என்ற சிறுவன் பைக் பந்தயத்தின் போது விபத்து ஏற்பட்டு ஹெல்மெட் தனியாக கழன்று சென்று சம்பவ இடத்திலேயே பரிதாப பலியானார்.

பைக் ரேஸில் மீண்டும் அதிர்ச்சி.. கழன்று விழுந்த Helmet.. தலையில் அடிபட்டு 13 வயது சிறுவனுக்கு சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலத்தில் இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை ரேஸில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதுபோன்ற ரேஸில் ஈடுபடுபவர்களுக்கு சில நேரங்களில் விபரீதங்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது ரேஸில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்தவர் ஸ்ரேயாஸ் ஹரீஷ். 13 வயது சிறுவனான இவருக்கு ரேஸில் மிகவும் ஆர்வம் இருந்துள்ளது. இதனால் இவர் பல்வேறு ரேஸ் பந்தயத்தில் விளையாடி வந்துள்ளார். அந்த வகையில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள Madras Motor Sports Club-ல் சிறுவன் பைக் ரேஸில் கலந்துகொண்டுள்ளார்.

பைக் ரேஸில் மீண்டும் அதிர்ச்சி.. கழன்று விழுந்த Helmet.. தலையில் அடிபட்டு 13 வயது சிறுவனுக்கு சோகம் !

காஞ்சிபுரம் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் MRF MMSC FMSCI இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது சுற்றில் சிறுவன் ஸ்ரேயாஸ் ஹரீஷ் பங்கேற்றார். அப்போது திடீரென விபத்து ஏற்பட்டு சிறுவனின் தலையில் மாட்டியிருந்த ஹெல்மெட் கழண்றுள்ளது. இதனால் அவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் மறைவுக்கு பலரும் இரங்கலும், அவரது குடும்பத்துக்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர். இந்த சோகத்தை அடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் நடைபெறவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் Madras Motor Sports Club ரத்து செய்தது.

பைக் ரேஸில் மீண்டும் அதிர்ச்சி.. கழன்று விழுந்த Helmet.. தலையில் அடிபட்டு 13 வயது சிறுவனுக்கு சோகம் !

2010-ல் பெங்களுருவில் பிறந்த சிறுவன் ரேஸில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோரும் ஊக்குவித்து வந்துள்ளனர். தனியார் பள்ளியில் படித்து வந்த இவர், சில ரேஸ்களில் பங்கேற்று தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். எனவே இவர் வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரமாக கருதப்பட்டார்.

இந்திய மோட்டார் ஸ்போர்ட்டில் இந்த ஆண்டு மட்டுமே இது இரண்டாவது நிகழ்வு. கடந்த ஜனவரியில் பிரபல ரேஸ் வீரரான 59 வயதான கே இ குமார் என்பவர், சென்னையில் நடந்த MRF MMSC FMSCI இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2022 இன் இரண்டாவது சுற்றில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories