இந்தியா

கழுத்தறுக்கப்பட்டு கிடந்த கணவன்.. சிறுவயது நண்பனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்.. புதுவையில் அதிர்ச்சி!

கணவரை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கழுத்தறுத்து கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழுத்தறுக்கப்பட்டு கிடந்த கணவன்.. சிறுவயது நண்பனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்.. புதுவையில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

புதுச்சேரி மேட்டுபாளையம் காவல் நிலையம் அருகே உள்ள மருத்துவ வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. 32 வயதுடைய இவருக்கு திருமணமாகி ரஞ்சிதம் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த சூழலில் வழக்கமாக கணவன் மனைவிக்குள் ஏற்படுவது போல் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற ரஞ்சிதம், தனது தாயார் வீட்டுக்கு சென்று வசித்து வந்துள்ளார். கணவர் சுப்பிரமணியம் அவரை சமாதானப்படுத்தி கூப்பிடாமல் இருந்துள்ளார். மேலும் மனைவி இல்லை என்பதால் தனது வீட்டின் அருகே இருக்கும் தாயார் வீட்டில் தினமும் சாப்பிட்டு வந்துள்ளார். இந்த சூழலில் நேற்றைய முன்தினம் காலை சுப்பிரமணி தனது தாய் வீட்டுக்கு செல்லவில்லை.

உயிரிழந்த சுப்பிரமணி
உயிரிழந்த சுப்பிரமணி

இதனால் சந்தேகமடைந்த தாயார், தனது மகனை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சுப்பிரமணி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை அதிர்ந்துபோன தாயார் உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுப்பிரமணியின் மனைவியிடமும் விசாரணை மேற்கொண்டனர். அவரது பதில் சற்று சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளது. தொடர்ந்து அவற்றை காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார், அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது காதலனை வைத்து தான்தான் கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.

தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில், மனைவி ரஞ்சிதத்திற்கும் உளவாய்க்கால் என்ற பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கும் சிறு வயது முதல் பழக்கம் இருந்துள்ளது. ஆனால் இவர்கள் இருவருக்கும் பெரிதாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், கடந்த 1 வருடத்துக்கு முன்பாக எதேர்ச்சியாக சந்திப்பு ஏற்பட்டு மீண்டும் பேசி பழக தொடங்கியுள்ளனர். தொடர்ச்சியாக செல்போனில் உரையாடினர்.

கழுத்தறுக்கப்பட்டு கிடந்த கணவன்.. சிறுவயது நண்பனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்.. புதுவையில் அதிர்ச்சி!

அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சுப்பிரமணிக்கு தெரியவரவே, அவர் ரஞ்சிதத்தை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரஞ்சிதம் வீட்டை விட்டு சென்ற பிறகு, மாறியப்பனை தொடர்பு கொண்ட சுப்பிரமணி எங்கள் தன் வீட்டில் நடக்கும் பிரச்சினைக்கு காரணம் நீதான் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்தே ரஞ்சிதம் மற்றும் அவரது ஆண் நண்பர் மாரியப்பன் சேர்ந்து சுப்பிரமணியை கொலை செய்ய எண்ணியுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று இரவு மது போதையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த சுப்பிரமணியை, மாரியப்பன் கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார். இவையனைத்தும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories