தமிழ்நாடு

”தமிழ்நாட்டிற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடாமல் பொய்களை பேசும் அமித்ஷா”.. கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு!

தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன? உத்தர பிரதேசத்திற்கு செய்தது என்ன என்பதை ஒப்பிட்டு பேச தயாரா? என அமித்ஷாவுக்கு, கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார்.

”தமிழ்நாட்டிற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடாமல் பொய்களை பேசும் அமித்ஷா”.. கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டிற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடாமல் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.

இது குறித்து சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.ஆழகிரி," ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருக்கிறார். வழக்கம்போல் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு புதிதாக எந்த திட்டத்தை வழங்கி இருக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. உத்திர பிரதேசத்தில் 10 எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைத்திருக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒன்று கூட இல்லை.

பழைய பணிகளுக்குத்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுக்கு எதுவும் நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களின் நிலை என்ன? சென்னை - மாமல்லபுரம் - கடலூர் ரயில்வே திட்டம் அமைக்கப்படவில்லை. திண்டிவனம் - செஞ்சி - நகரி ரயிவே திட்டம் 9 ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை.

திண்டிவனம் - திருவண்ணாமலை திட்டமும் நிலுவையில் உள்ளது. மும்பையில் இருந்து குஜராத் வழியாக டெல்லி செல்கிற காரிடார் பணிக்கு ஏறக்குறைய 2 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறீர்கள். அதுபோல் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

”தமிழ்நாட்டிற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடாமல் பொய்களை பேசும் அமித்ஷா”.. கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையோடு அறிவிக்கப்பட்ட பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் மதுரையில் 7 ஆண்டுகளாக எந்த கட்டடமும் கட்டப்படவில்லை. இதற்கு எல்லாம் அமித்ஷா என்ன பதில் சொல்லப் போகிறார். ஒரு துரும்பை கூட தமிழ்நாட்டிற்கு நீங்கள் தரவில்லை.

ஆனால் இன்றைக்கு இங்கு வந்து உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை உள்துறை அமைச்சர் சொல்வது மிகவும் தவறானது. ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு தமிழர் பிரதமராக வருவார் என்று சொல்கிறார். அது அண்ணாமலையா? அல்லது முருகனை கொண்டாடப் போறீங்களா?.

”தமிழ்நாட்டிற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடாமல் பொய்களை பேசும் அமித்ஷா”.. கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு!

அண்ணாமலை போன்றவர்கள் பொய் சொல்லலாம். ஆனால் உள்துறை அமைச்சர் இது போன்ற பொய்களை சொல்ல கூடாது. தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறுகிறார். அது தப்பில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு அதற்கான இடம் இல்லை. முதலில் தமிழ்நாட்டிற்கு ஏதாவது செய்து விட்டு பிறகு பேச வேண்டும்.

தமிழர்கள் என்று உங்கள் அமைச்சரவையில் ஜெய்சங்கர், நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை வைத்திருக்கிறீர்கள். இவர்கள் இந்த 9 ஆண்டில் தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்திருக்கிறார்கள். இவர்கள் துறை மூலமாக தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இவர்கள் எதையாவது செய்து இருக்கிறார்களா இவர்களின் பங்களிப்பு என்ன? நிர்மலா சீதாராமன் தனது சொந்த ஊர் மதுரை என்கிறார். ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் பணம் வரவில்லை. இதற்கு பாஜக சொல்லும் காரணங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.

9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு அரசு எதையுமே செய்யவில்லை. பல திட்டங்களுக்கு நிதி உதவியே இல்லை. உத்திர பிரதேசத்திற்கும் செய்த உதவியையும், தமிழ்நாட்டிற்கு செய்த உதவியையும் ஒப்பிட்டு பேச அமித்ஷா தயாரா? அமித்ஷாவின் பொய்யுரையை ஏற்றுக்கொள்ள தமிழர்கள் தயாராக இல்லை.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories