தமிழ்நாடு

ரூ.1500 கோடி முதலீடு.. முதலமைச்சரால் தமிழ்நாடு செழிக்கும் : தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ட்வீட்!

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளின் பயணத்தை வெற்றிகரமாக முடித்து இன்று இரவு தமிழ்நாடு திரும்புகிறார் நமது முதலமைச்சர் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரூ.1500 கோடி முதலீடு.. முதலமைச்சரால் தமிழ்நாடு செழிக்கும் :  தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவிருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முதலீட்டாளர்களை அழைப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.

மே23ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் முலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் நாட்டிற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI),Singapore India Partnership Office (SIPO), Singapore India Partnership Office (SIPO),Hi-P International Pvt. Ltd., Singapore, Singapore University of Technology & Design (SUTD), ITE Education Services, Singapore ஆகிய ஆறு நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ரூ.1500 கோடி முதலீடு.. முதலமைச்சரால் தமிழ்நாடு செழிக்கும் :  தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ட்வீட்!

இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மே 26ம் தேதி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் சுமார் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாடும், வரவேற்கிறது என பேசினார்.

மேலும் ஜப்பான் நாட்டின் KyoKuto Satrac, Mitsuba, Shimizu Corporation, Kohyei, Sato-Shoji Metal Work, Tofle ஆகிய ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டோக்கியோ விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளின் பயணத்தை வெற்றிகரமாக முடித்து இன்று இரவு தமிழ்நாடு திரும்புகிறார் நமது முதலமைச்சர் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "GIM2024 வெற்றிகரமாக அமைய முதலமைச்சர் அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக சிங்கை மற்றும் ஜப்பான் நாடுகளில் முதலீட்டாளர்களை சந்தித்து, பலருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1500 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகளை இறுதி செய்துவிட்டு, மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையை நேரில் நடத்தி, பயணத்தை வெற்றிகரமாக முடித்து இன்று இரவு தமிழ்நாடு திரும்புகிறார் நமது முதலமைச்சர்.

9 நாட்கள் அவருடன் பயணித்து அவரது ஆலோசனைக்கேற்ப, துறை அதிகாரிகளுடன் இணைந்து பல புதிய முயற்சிகளில் களமிறங்கியுள்ளோம். 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நமது மக்களுக்கு குறிப்பாக, படித்த இளம் தலைமுறையினருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். பெற்றோர்களின் நெஞ்சங்கள் குளிரும். முதலமைச்சரின் 1 ட்ரில்லியன் டாலர் கனவும் நனவாகும். தமிழ்நாடு செழிக்கும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories