தமிழ்நாடு

தேவையற்ற பேச்சு.. திட்டமிட்டு வன்முறை செய்ய ப்ளான் : சீமானின் அடிப்பொடிகள் மீது வழக்குப்பதிவு !

நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசரை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவையற்ற பேச்சு.. திட்டமிட்டு வன்முறை செய்ய ப்ளான் : சீமானின் அடிப்பொடிகள் மீது வழக்குப்பதிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதனிடையே வழக்கம்போல நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் மேனகா நவநீதன் என்ற பெண் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பிரச்சாரத்தின் போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூகத்தினரை குறித்து அவதூறாக குறிப்பிட்டு பேசியதும், குறிப்பிட்ட சமூகத்தினரை 'வந்தேறிகள்' என்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேவையற்ற பேச்சு.. திட்டமிட்டு வன்முறை செய்ய ப்ளான் : சீமானின் அடிப்பொடிகள் மீது வழக்குப்பதிவு !

இதன் காரணமாக அந்த தொகுதியின் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியினரை தொகுதி மக்கள் விரட்டினர். மேலும், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சீமானின் உருவபொம்மை எரிக்கப்பட்ட து. அதோடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, அருந்ததியர் சமூகம் பற்றிய அவதூறு கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கருங்கல்பாளையம் போலிசார் வழக்குப்பதிவும் செய்தனர்.

தேவையற்ற பேச்சு.. திட்டமிட்டு வன்முறை செய்ய ப்ளான் : சீமானின் அடிப்பொடிகள் மீது வழக்குப்பதிவு !

இந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசரை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை உக்கடம் பகுதியில் கடந்த டிச.6 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசரை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், தேசிய ஒறுமைபாட்டிற்கு குந்தகம் விளைவிற்கும் விதமாகவும், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக உதவி ஆய்வாளர் ரேனுகா தேவி புகார் அளித்தார். புகார் அடிப்படையில் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories