தமிழ்நாடு

கொழுப்பு விகடன் : தொழிலாளர்கள் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? - வெளுத்து வாங்கிய முரசொலி நாளேடு!

விகடன் விருதை திருப்பி அனுப்பினாரே இயக்குநர் லெனின் பாரதி? முதலாளித்தனத்தைக் காரித் துப்பித்தானே?

கொழுப்பு விகடன் : தொழிலாளர்கள் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? - வெளுத்து வாங்கிய முரசொலி நாளேடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திமிர்.மு.க. என்று அட்டைப்படம் போடுகிறது கொழுப்பு விகடன். தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவுக்குப் பொங்குகிறது தொழிலாளர் விரோத விகடன்.அதைத்தான் உடனடியாக நிறுத்தி வைத்துவிட்டார்முதலமைச்சர்.

தொழிற்சங்கத்தினர் அனைவரையும் கோட்டைக்கு அழைத்துப் பேசி அவர்களின் கருத்தைப் பெற்று உடனடியாக நிறுத்திவைத்தவர் கருணையே வடிவான முதலமைச்சர் அவர்கள். தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பதற்காக சொந்த அச்சகத்தையே மூடும் அளவுக்கு மூளைகெட்ட விகடன் அது.

கொழுப்பு விகடன் : தொழிலாளர்கள் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? - வெளுத்து வாங்கிய முரசொலி நாளேடு!

திருட்டுத் தனமாக திருச்சியில் ஒரு பிரஸை பினாமி பெயரில் உருவாக் கிய பிராடு விகடன் அது. வாசலில் உட்கார்ந்து போராடிய சொந்தத் தொழிலாளிகளை விரட்ட ரவுடிகளை அழைத்து வந்த போக்கிரி விகடன் அது. கொரோனா காலத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை இரக்கமற்று நீக்கிய வைரஸ் விகடன் அது.

'குரலற்றவர்களின் குரலாக ஒலித்த வர்களையே இன்று குரலற்றவர்களாக்கிவிட்டீர்களே' என்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கம். சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சென்னை நிருபர்கள் சங்கம், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம், தமிழ்நாடு பத் திரிக்கை புகைப்படக் கலைஞர்கள் சங்கம். தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவா ளர்கள் சங்கம், தமிழ்நாடு உழைக் கும் பத்திரிக்கையாளர் சங்கம். தமிழ்நாடு செய்திவாசிப்பாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து கூட்டறிக்கை விட்டபோது கூமுட்டை விகடன் எங்கே மேயப் போனது?

கொழுப்பு விகடன் : தொழிலாளர்கள் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? - வெளுத்து வாங்கிய முரசொலி நாளேடு!

நீக்கப்பட்டவர்களுக்காவது இது வரை செட்டில்மென்ட் செய்யப்பட்டதா? விகடன் விருதை திருப்பி அனுப்பினாரே இயக்குநர் லெனின் பாரதி? முதலாளித்தனத்தைக் காரித் துப்பித்தானே?இவங்களுக்கெல்லாம் என்ன யோக்கியதை இருக்கிறது - தொழிலாளர்கள் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?

banner

Related Stories

Related Stories