தமிழ்நாடு

கடா கறி பங்கு பிரிப்பதில் தகராறு.. மதுபோதையில் நடந்த கொடூரம் - நண்பர்கள் உட்பட 8 பேரை கைது செய்த போலிஸ்!

திருப்பெரும்புதூர் அருகே பல்வேறு குற்றவழக்கில் தொடர்புடைய நாகராஜ் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் முக்கியமான 4 நபர்கள் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடா கறி பங்கு பிரிப்பதில் தகராறு.. மதுபோதையில் நடந்த கொடூரம் - நண்பர்கள் உட்பட 8 பேரை கைது செய்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த கிளாய் ஊராட்சியைச் சேர்ந்தவர் நாகராஜ் (41). இவர் டிராவல்ஸ் மற்றும் தொழிற்சாலையில் ஸ்க்ராப் எடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் திருப்பெரும்புதூரில் உள்ள அ.தி.மு.க முக்கிய பிரமுகர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி என்று நாகராஜ் கிளாய் கிராமத்தின் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு பின்புறம் கிளாய் பகுதியை சேர்ந்த சக நண்பர்கள் மற்றும் உறவினர்களான கண்ணன், குமரன், சுந்தரம் , ராஜ்குமார் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த விஜயகாந்த் ஆகிய 6 பேருடன் மது அருந்துவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்து அங்கு பாழடைந்த கட்டிடம் அருகே மது அருந்தி உள்ளனர்.

கடா கறி பங்கு பிரிப்பதில் தகராறு.. மதுபோதையில் நடந்த கொடூரம் - நண்பர்கள் உட்பட 8 பேரை கைது செய்த போலிஸ்!

அப்போது உடனிருந்த ஒரு நண்பரான கண்ணன் மற்றும் விஜயகாந்த் இருவரும் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கையில், நாகராஜ் மது அருந்திய இடத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்துள்ளதாக திருப்பெரும்புதூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பெரும்புதூர் காவல் துறையினர், சடலத்தை மீட்டு திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மது அருந்திய நண்பர்களே கொலை செய்திருப்பார்களா என்கிற பலகோணத்தில் திருப்பெரும்புதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கடா கறி பங்கு பிரிப்பதில் தகராறு.. மதுபோதையில் நடந்த கொடூரம் - நண்பர்கள் உட்பட 8 பேரை கைது செய்த போலிஸ்!

இந்நிலையில், நாகராஜை கொலை செய்து தப்பிய நபர்களை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும் உடன் மது அருந்தியவர்களை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, மது அருந்திய இடத்தில் இருந்து கண்ணன் மற்றும் விஜயகாந்த் வெளியே சென்ற பிறகு, அந்த இடத்திற்கு கிளாய் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் மற்றும் அவனது கூட்டாளிகள் 4 பேர் வந்து நாகராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முற்பட்டனர்.

கடா கறி பங்கு பிரிப்பதில் தகராறு.. மதுபோதையில் நடந்த கொடூரம் - நண்பர்கள் உட்பட 8 பேரை கைது செய்த போலிஸ்!

அப்போது நாகராஜ் அதிக மதுபோதையில் இருந்ததால் கீழே விழுந்துள்ளார். பின்னர் நாகராஜை 4 பேர் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் கிளாய் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் தனிநபர் ஒருவர் நேர்த்திக்கடனுக்காக 6 கடா வெட்டி சென்றுள்ளார். கோவிலில் இருந்து 6 கடாவை வைத்து ஊருக்கே விருந்து அளிக்கப்பட்டது. இதில் பங்கு பிரிப்பதில் செல்வக்குமாருக்கும், நாகராஜூக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக திருப்பெரும்புதூர் காவல்நிலையத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறை சென்றனர்.

கடா கறி பங்கு பிரிப்பதில் தகராறு.. மதுபோதையில் நடந்த கொடூரம் - நண்பர்கள் உட்பட 8 பேரை கைது செய்த போலிஸ்!

மேலும் தான் சிறை சென்றதற்கு நாகராஜ் தான் காரணம் என்றும் மது போதையில் இருக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளதாகவும் மேலும் ஸ்க்ராப் மற்றும் கட்டுமான பொருட்கள் சப்ளை செய்வதில் சிறையில் உள்ள பிரபல ரவுடிக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாகவும் எனவே அவரின் தூண்டுதலின் பேரிலே செல்வக்குமாருக்கும் நாகராஜூக்கும் கடா விருந்தில் மோதல் ஏற்பட்டது எனவும் இதன் காரணமாக கொலை செய்திருக்கலாம் என திருப்பெரும்புதூர் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து கிளாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (29), விஜய் (27), சூரக்காபுரம் பகுதியை சேர்ந்த ரெட் (எ) கார்த்தி (27), திருப்பெரும்புதூரை சேர்ந்த பல்லு மணிகண்டன் (25) ஆகிய நான்கு பேரை இன்று சிறப்பு தனிப்படை போலிஸார் திருவலங்காடு பகுதியில் வைத்து கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

கடா கறி பங்கு பிரிப்பதில் தகராறு.. மதுபோதையில் நடந்த கொடூரம் - நண்பர்கள் உட்பட 8 பேரை கைது செய்த போலிஸ்!

மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருப்பெரும்புதூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ராமுவை(25) தேடி வந்த நிலையில், ஓட்டேரி அருகே ஓட்டேரி காவலர்களால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார். கொலைக்கு திட்டம் தீட்டி பண உதவி செய்த ரவி மற்றும் சிலம்பரசன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மகாலக்ஷ்மி தான் பணம் கொடுத்து கொலைக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது. ஆகவே திருப்பெரும்புதூர் பகுதியை சேர்ந்த ராமு, கிளாய் பகுதியை சேர்ந்த ரவி, சிலம்பரசன் மற்றும் மகாலட்சுமி ஆகியோரை திருப்பெரும்புதூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். நாகராஜ் கொலை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பணம் குடுத்து உதவிய 3 பேர்ம் பண உதவி செய்த பெண் உட்பட மேலும் 4 பேர் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories