தமிழ்நாடு

“ஆமை புகுந்த வீடும், பா.ஜ.க புகுந்த மாநிலமும் விளங்காது” : அண்ணாமலையை வெளுத்து வாங்கிய ப.சிதம்பரம் !

“ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். அதுபோல பா.ஜ.க புகுந்த மாநிலம் உருப்படாது. தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரான கட்சி பா.ஜ.க” என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

“ஆமை புகுந்த வீடும், பா.ஜ.க புகுந்த மாநிலமும் விளங்காது” : அண்ணாமலையை வெளுத்து வாங்கிய ப.சிதம்பரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தானா தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்டம் - எழும்பூர் வடக்கு பகுதி சார்பாக, கரங்கள் இணையும் அறங்கள் வளரும் என்ற தலைப்பில் எழும்பூர் வடக்கு பகுதி செயலாளர் நியமனக்குழு உறுப்பினர் - சொ.வேலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

முன்னாள் ஒன்றிய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய ப.சிதம்பரம், “21 மாதம் தி.மு.க ஆட்சிக்கு மக்கள் கொடுத்த பரிசு தான் ஈரோடு தேர்தல் வெற்றியாகும். இது தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது.

ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)

இந்த தேர்தலில் மிக பெரிய தோல்வியை அடைந்தவர்கள் இனியாவது அடங்கி இருக்க வேண்டும். இப்போதும் அடங்கவில்லை என்றாள் இதைவிட மிகப்பெரிய தோல்வியை அவர்களுக்கு தரவேண்டும். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது. இந்த ஆண்டு 4 காலாண்டிலும் ஒன்றை விட ஒன்று வளர்ச்சி குறைவாக இருக்கிறது.

இந்தியா வளர்கிறது என்பது கட்டுக்கதை. ஏறு முகத்தில் வளர்ச்சி இல்லை, இறங்குமுக வளர்ச்சியில் உள்ளது. பண வீக்கம், வேலையின்மையால் அடித்தட்டு மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்திய அரசு சில முதலாளிகளுக்காக அமைக்கப்பட்ட அரசு. அவர்களுக்குள் ஒரு உடன்பாடு உள்ளது. பா.ஜ.க. தேர்தல் பத்திரங்கள் விற்பதை தொழிலதிபர்கள் வாங்க வேண்டும் என்பது தான் அந்த உடன்பாடு.

“ஆமை புகுந்த வீடும், பா.ஜ.க புகுந்த மாநிலமும் விளங்காது” : அண்ணாமலையை வெளுத்து வாங்கிய ப.சிதம்பரம் !

வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை பற்றி பாஜக பேசுவது வேடிக்கையானது. ஆமையும், அமீனாவும் புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். அதுபோல பா.ஜ.க புகுந்த மாநிலம் உருப்படாது. புலம்பெயர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பவர்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தான் பாதுகாப்பு தரவில்லை.

வட மாநிலங்களில் வறுமை தான் உள்ளது. இங்கு வாய்ப்புப் உள்ளது. உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் உள்ளவர்கள் பாதுகாப்புக்காக மற்ற மாநிலங்களை நோக்கி செல்கின்றனர். சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ.க அரசால் பாதுகாப்பு இல்லை.

புரளியை தொடர்ந்து பரப்பினால் அது உண்மையாகும் என்று நம்பிக்கொண்டுள்ளனர். பா.ஜ.க, தமிழ்நாடு வளர்ச்சிக்கும் தமிழ் மொழிக்கு நேர் விரோதமான கொள்கை உடைய கட்சி. நாம் மறக்க கூடாது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்த பிளவையும் யாரும் ஏற்படுத்த முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories