சினிமா

பணம்தான் அவளுக்கு முக்கியம்: மனைவியின் குற்றச்சாட்டை மறுத்து நடிகர் நவாசுதீன் சித்திக் பரபரப்பு கடிதம்!

மனைவி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நீண்ட கடிதம் மூலம் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளார்.

பணம்தான் அவளுக்கு முக்கியம்: மனைவியின் குற்றச்சாட்டை மறுத்து நடிகர் நவாசுதீன் சித்திக் பரபரப்பு கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர்தான் நவாசுதீன் சித்திக். 1999-ல் தொடங்கிய இவரது திரைப்பயணம் தற்போது வரை தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்தி மட்டுமின்றி பிற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் கூட கடந்த 2019-ம் ஆண்டு கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார்.

இவர் 2009-ம் ஆண்டு அஞ்சனா பாண்டே என்பவரைத் திருமணம் செய்த நிலையில், இவர்களது வாழ்க்கை சுமுகமாகச் சென்றது. பின்னர் அஞ்சனா தனது பெயரை ஆலியா சித்திக் என மாற்றிக்கொண்டார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக 2020-ல் விவகாரத்து பெற்றனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

பணம்தான் அவளுக்கு முக்கியம்: மனைவியின் குற்றச்சாட்டை மறுத்து நடிகர் நவாசுதீன் சித்திக் பரபரப்பு கடிதம்!

தனது கணவன் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், ஆலியா சித்திக் புகார் அளித்திருந்தார். மேலும் அவர் பேசும் வீடியோவும் வைரலாகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்பிரச்சனைகள் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த நடிகர் நவாசுதீன் சித்திக் தற்போது நீண்ட கடிதம் ஒன்றின் மூலம் தனது விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், "எனது அமைதியால் நான் கெட்டவன் என்று எல்லா இடங்களிலும் அவமதிக்கப்படுகிறேன். என் அமைதிக்குக் காரணம் என் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான் நான் எதுவும் பேசவில்லை.

நாங்கள் இருவரும் ஏற்கனவே விவாகரத்து பெற்றுவிட்டோம். இருந்தாலும் அவர் எனது குழந்தைகளுக்குத் தாய் என்பதால் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 5 முதல் 7 லட்சம் வரை அலியா என்னிடம் பணம் பெற்றுள்ளார். எனது குழந்தைக்குத் தாய் என்பதால் அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்தேன். அவருக்குக் கொடுத்த ஆடம்பர காரை விற்று அதில் கிடைத்த பணத்தையும் செலவழித்துள்ளார்.

அவருக்குப் பணம் மட்டுமே தேவை. தற்போது எனது குழந்தைகளை துபாயில் இருந்து இங்க கொண்டுவந்து பணம் கேட்ட இப்படிப் பேசி வருகிறார். 45 நாட்களாக அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. அங்கிருந்து கடிதம் எனக்கு வந்துள்ளது. கடந்த முறையும் அலியா இப்படிச் செய்துள்ளார். எனது பெயரைக் கெடுக்கவே இவர் இப்படிச் செய்து வருகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவரின் இந்த விளக்கக் கடிதம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories