சினிமா

“என்னால அதுல இருந்து இன்னும் மீள முடியல..” - நூலிழையில் உயிர் தப்பிய AR ரகுமானின் மகன் : நடந்தது என்ன ?

ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்து குறித்த புகைப்படங்களை பகிர்ந்து நூலிழையில் உயிர் தப்பியதாக குறிப்பிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“என்னால அதுல இருந்து இன்னும் மீள முடியல..” - நூலிழையில் உயிர் தப்பிய AR ரகுமானின் மகன் : நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர்தான் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசை ரசிக்கத்தவர்கள் இருக்கவே முடியாது. ஆஸ்கார் விருது வரை பல்வேறு விருதுகளை பெற்ற இவருக்கு கதிஜா, ரஹீமா, அமீன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் கதிஜா மற்றும் அமீன் இசையில் தந்தையை போலவே ஆர்வம் மிக்கவராக காணப்படுகின்றனர்.

“என்னால அதுல இருந்து இன்னும் மீள முடியல..” - நூலிழையில் உயிர் தப்பிய AR ரகுமானின் மகன் : நடந்தது என்ன ?

அமீன், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான 2009-ல் வெளியான ஆங்கில படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். அதன்பின்னர் தமிழில் 2015-ல் வெளியான 'ஒகே கண்மணி' படத்தில் "மெளலா வா சலீம்' என்ற பாடல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளில் பாடல் பாடி வருகிறார்.

“என்னால அதுல இருந்து இன்னும் மீள முடியல..” - நூலிழையில் உயிர் தப்பிய AR ரகுமானின் மகன் : நடந்தது என்ன ?

மேலும் ரஜினி நடிப்பில் வெளியான 2.O படத்தில் இடம்பெற்ற 'புள்ளிங்கங்காள்" பாடலை பாடியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'கலாட்டா கல்யாணம்' படத்தில் இடம்பெற்ற "சூறாவளி பொண்ணு" என்ற பாடலை பாடியுள்ளார். தொடர்ந்து தனியாக ஆல்பம் பாடல்களும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் பாடல் காட்சியில் கலந்துகொண்டார். அப்போது கிரேனில் விளக்குகள் சட்டென்று எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவர் காயமின்றி தப்பியுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பில் பங்கேற்றேன். குழுவினர், பாதுகாப்பு விஷயங்களைச் சரியாகச் செய்திருப்பார்கள் என நம்பினேன். கேமரா முன் பாடுவதில் கவனமாக இருந்தபோது, கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விளக்குகள் திடீரென்று விழுந்தன.

சில அங்குலமோ, சில வினாடியோ முன் பின் ஆகி இருந்தால் எங்கள் தலையில் அவை விழுந்திருக்கும். இந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

“என்னால அதுல இருந்து இன்னும் மீள முடியல..” - நூலிழையில் உயிர் தப்பிய AR ரகுமானின் மகன் : நடந்தது என்ன ?

இவரது இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இவரது தந்தை ஏ.ஆர்.ரகுமான் "Miraculous escape … இறைவனின் அருள்!" என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பலரும் இவரது பதிவிற்கு கமெண்ட் மூலம் கவனமுடன் இருங்கள் என்றும், ஆறுதல் தெரிவித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“என்னால அதுல இருந்து இன்னும் மீள முடியல..” - நூலிழையில் உயிர் தப்பிய AR ரகுமானின் மகன் : நடந்தது என்ன ?

தொடர்ந்து இவரது சகோதரி கதிஜா, ஜி.வி.பிரகாஷின் மனைவி பாடகி சைந்தவி, போனி கபூர் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

“என்னால அதுல இருந்து இன்னும் மீள முடியல..” - நூலிழையில் உயிர் தப்பிய AR ரகுமானின் மகன் : நடந்தது என்ன ?

முன்னதாக இதே போல் விஷால் படப்பிடிப்பின் போது தீ விபத்து ஏற்பட்டது. அதே போல் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பாடகர் பென்னி தயாள், தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பாட்டு பாடி கொண்டிருந்த நிலையில், அவரது பின் தலையில் சட்டென்று ட்ரோன் கேமரா பட்டு அவரது விரல்களில் லேசாக காயத்தோடு தப்பினார். இது போன்ற சம்பவங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories