தமிழ்நாடு

பிரபல நடிகர் ரவி மரியா பெயரில் பணம் மோசடி.. போலி இன்ஸ்டாகிராம் ID மூலம் கைவரிசை காட்டிய மர்ம கும்பல்!

பிரபல நடிகர் ரவி மரியா பெயரில் போலி இன்ஸ்டாகிராம் ஐடி தொடங்கி அவரை பின்தொடர்பவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர் ரவி மரியா பெயரில் பணம் மோசடி.. போலி இன்ஸ்டாகிராம் ID மூலம் கைவரிசை காட்டிய மர்ம கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபல குணசித்திர நடிகர் ரவிமரியா. இவர் ஆசை ஆசையாய், மிளகா, ஆகிய படங்களை இயக்கியதுடன், கூர்கா, சரவணன் இருக்க பயமேன், தேசிங்குராஜா, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல படங்களில் முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் ரவிமரியா தென்மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் ஒன்றை உருவாக்கி, தன்னை பின் தொடர்பவர்களை நட்பாக இணைத்து, பின்னர் அவர்களிடம் அவசரமாக மருத்துவ உதவிக்கு 10,000 தேவைப்படுவதாக குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர்.

பிரபல நடிகர் ரவி மரியா பெயரில் பணம் மோசடி.. போலி இன்ஸ்டாகிராம் ID மூலம் கைவரிசை காட்டிய மர்ம கும்பல்!

இதனை நம்பி தனது நண்பர் அந்த நபருக்கு 7 ஆயிரம் பணம் அனுப்பி வைத்துள்ளதாகவும், இதே போல் பலரிடம் தான் பணம் கேட்டதுபோல் குறுஞ்செய்தி அனுப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் தன்னை தொடர் கொண்டு உங்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கேள்விப்பட்டு மருத்துவ செலவுக்கு பணம் அனுப்பியுள்ளதாக கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்து இன்ஸ்டாகிராமை ஆய்வு செய்த போது, என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி என் பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஆகவே எனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் ஐடி தொடங்கி பண மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரவி மரியா புகாரின் பேரில் சைபர் கிரைம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories