தமிழ்நாடு

Clubhouse செயலியில் 14 வயது சிறுமியிடம் ஆபாச சாட்டிங்.. வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!

கிளப்ஹவுஸ் செயலிகள் மூலமாக 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி ஆபாசமாக சேட் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்துள்ளனர்.

Clubhouse செயலியில் 14 வயது சிறுமியிடம் ஆபாச சாட்டிங்.. வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 14 வயது சிறுமி காணாமல் போனதாக அவரது தாயார் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தார். இது தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் சிறுமி தாயாரின் செல்போனை எடுத்துச் சென்றது போலிஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த எண்ணில் தொடர்பு கொண்ட பேசிய பிறகு சிறுமி மறுநாளே வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து போலிஸாரி சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், சிறுமி கிளப்ஹவுஸ் என்ற செயலி மூலம் நண்பர்கள் பலருடன் பேசி வந்துள்ளார். மேலும் இந்த செயலி மூலம் அவருக்குப் பல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.

Clubhouse செயலியில் 14 வயது சிறுமியிடம் ஆபாச சாட்டிங்.. வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!

அப்படி சிறுமிக்கு, நிஷாந்த் குமார் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. பின்னர் இருவரும் செயலி வழியாகப் பேசி பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நிஷாந்த் குமார் சிறுமியைக் காதலிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதுபற்றி தெரிந்த அவரது தாயார் சிறுமியைத் திட்டியுள்ளார். இதனால் கோபம் அடைந்த சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி நிஷாந்த்குமாருடன் சென்றுள்ளார். அப்போது அவர் செல்லும் போது, தயாரின் செல்போனை எடுத்துச் சென்றுள்ளார்.

இதில் தொடர்பு கொண்டு போலிஸார் மற்றும் பெற்றோர்கள் பேசியதை அடுத்துப் பயந்த நிஷாந்த்குமார் சிறுமியை மீண்டும் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். இருப்பினும், நிஷாந்த் குமார் சிறுமிக்கு செல்போன் மூலமாகத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதனால் தனிப்படை அமைத்துத் நிஷாந்த் குமார் குறித்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

Clubhouse செயலியில் 14 வயது சிறுமியிடம் ஆபாச சாட்டிங்.. வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!

இதனைத் தொடர்ந்து காட்பாடியைச் சேர்ந்த நிஷாந்த்குமாரை கைது செய்து அவரது செல்போனை ஆய்வு செய்தபோது சிறுமியுடன் அவர் ஆபாசமாகப் பேசியது தெரியவந்தது. மேலும் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வரும் இவர் மீது ஆவடி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் ஆபாசமாக சேட் செய்த நிஷாந்த்குமாரை போக்சோ சட்டத்தில் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 8 மாதமாகத் தொடர் விசாரணை நடத்தி குற்றவாளியைக் கைது செய்த தனிப்படை போலிஸாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories