தமிழ்நாடு

கணவன் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவிக்கு நடந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

புதுக்கோட்டையில் கணவன் இறந்த செய்தியைக் கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவிக்கு நடந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு துவரவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி வினிதா. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தையும், பிறந்து 4 மாதங்களே ஆன ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 9ம் தேதி திருநாவுக்கரசு கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த திருநாவுக்கரசு தனது அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கணவன் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவிக்கு நடந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
Photolyric Stock Productions (Klöpper & Eisenschmidt GbR)

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டிலிருந்த உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது.

அப்போது அங்கு வந்த மனைவி வினிதா கணவன் உடலைப் பார்த்து ஓடிவந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் வினிதா ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளது. இதைக்கேட்டு உறவினர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

கணவன் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவிக்கு நடந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

பின்னர் திருநாவுக்கரசு உடல் அடக்கம் செய்யப்பட்டதை அடுத்து மனைவி வனிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடுத்தடுத்து கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories