தமிழ்நாடு

‘சூடு வைத்து கொடுமை’ - குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறி கொலை செய்த தம்பதி.. அதிரடியாக கைது செய்த போலிஸ்!

குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்வதாக கூறி, சேட்டை செய்ததால் சூடு வைத்து, அடித்து துன்புறுத்தி 4 வயது குழந்தையை கொன்ற தம்பதியினரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘சூடு வைத்து கொடுமை’ - குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறி கொலை செய்த தம்பதி.. அதிரடியாக கைது செய்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்வதாக கூறி, சேட்டை செய்ததால் சூடு வைத்து, அடித்து துன்புறுத்தி 4 வயது குழந்தையை கொன்ற தம்பதியினரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் - கெளரி தம்பதியினர். கூலி தொழில் செய்து வரும் இவர்களுக்கு ஷிவானி என்று 4 வயது குழந்தை ஒன்று உள்ளது. குழந்தைகளுக்கே இருக்கும் அந்த குறும்பு நிறைந்த சிறுமியாக இருக்கும் ஷிவானி, தனது உறவினர்கள் அனைவரிடமும் ஜாலியாக இருந்து வருவார்.

‘சூடு வைத்து கொடுமை’ - குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறி கொலை செய்த தம்பதி.. அதிரடியாக கைது செய்த போலிஸ்!

மல்லிகா என்ற பெண்ணின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இவர்கள், அடிக்கடி வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் மல்லிகாவின் உறவினரான வடமதுரை அருகே உள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்த ராஜேஷ்குமார் - கீர்த்திகா தம்பதியினர் அடிக்கடி மல்லிகாவை காண வீட்டிற்கு வருவர். அப்படி வருகையில் கீர்த்திகாவுக்கு, வாடகை வீட்டில் குடியிருக்கும் பிரகாஷின் குழந்தை ஷிவானியை மிகவும் பிடித்துள்ளது.

குழந்தை இல்லாத கீர்த்திகா, ஷிவானியை காண, அவருடன் விளையாடவே அடிக்கடி மல்லிகா வீட்டிற்கு வருவார் என்று சொல்லப்படுகிறது. அப்படி கடந்த 20-ம் தேதி மல்லிகா வீட்டிற்கு வந்த கீர்த்திகா, ஷிவானியை தனது ஊருக்கு எங்களுடன் அனுப்பி வைக்குமாறு பிரகாஷ் - கெளரியிடம் கேட்டுள்ளார். முதலில் தயங்கிய அவர்கள், பத்திரமாக பார்த்துக்கொள்வதாக அளித்த வாக்குறுதியால் நம்பிக்கை வைத்து கீர்த்திகாவுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

‘சூடு வைத்து கொடுமை’ - குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறி கொலை செய்த தம்பதி.. அதிரடியாக கைது செய்த போலிஸ்!

சிறிது நாள் தங்குவதற்காக தங்கள் மகளை கீர்த்திகாவுடன் அனுப்பிய பிரகாஷ், மகளின் பிரிவால் வருத்தமுற்று இருந்துள்ளனர்.. இருப்பினும் தங்கள் மகள் அங்கே மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணியிருந்த இவர்களுக்கு கடந்த 2-ம் தேதி கீர்த்திகா போன் மூலம் தொடர்பு கொண்டு, ஷிவானி வழுக்கி வீழுந்து அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பதறிப்போன சிறுமியின் பெற்றோர் மதுரைக்கு விரைந்து சென்றனர். அங்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அப்போது சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் தீக்காயங்கள், தடம் உள்ளிட்டவற்றை கண்டுள்ளனர். இதையடுத்து சிறுமி தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்து, குடும்பத்தாரிடம் கூறினர்.

‘சூடு வைத்து கொடுமை’ - குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறி கொலை செய்த தம்பதி.. அதிரடியாக கைது செய்த போலிஸ்!

தொடர்ந்து மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பிரகாஷ் - கெளரி தம்பதியினர் காவல்துறையில் ராஜேஷ்குமார் - கீர்த்திகா மீது புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சிறுமி தங்கள் வீட்டிற்கு வந்ததில் இருந்து அதிக சேட்டை செய்ததாகவும், முதலில் அமைதியாக கூறினாலும் கூட கேட்காமல் சேட்டை செய்துகொண்டிருந்ததால் அடித்ததும் தெரியவந்தது. மேலும் மிகவும் தொந்தரவு கொடுத்ததால் சிறுமிக்கு சூடு வைத்ததும் தெரியவந்தது.

‘சூடு வைத்து கொடுமை’ - குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறி கொலை செய்த தம்பதி.. அதிரடியாக கைது செய்த போலிஸ்!

அதோடு சம்பவத்தன்று, சிறுமி வீட்டிற்குள் உபாதை கழித்ததால் ஆத்திரமடைந்த கீர்த்திகா, ஷிவானியை பிடித்து தள்ளியுள்ளார். இதில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உடனே மயக்க நிலைக்கு சென்றுள்ளார் சிறுமி. பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கே சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கீர்த்திகா - ராஜேஷ்குமார் மீது சிறுமியை அடித்து துன்புறுத்தி கொன்றதாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்வதாக கூறி, சேட்டை செய்ததால் சூடு வைத்து, அடித்து துன்புறுத்தி 4 வயது குழந்தையை கொன்ற தம்பதியினரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories