தமிழ்நாடு

வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?

த.வெ.க. அமைச்சர் சரத்குமார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் மைதானத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற தோற்றமளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

த.வெ.க. ஆட்சி அமைத்த 40 நாள்களில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பண மோசடி புகார்கள் என குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களின் பின்னணியில் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், போதைப் பொருட்கள் இல்லாத சூழலை உருவாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த திராவிட மாடல் ஆட்சியிலும், 'போதையில்லா தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பு, மக்களின் பங்களிப்புடன் எந்தவித சர்ச்சையும் இன்றி வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆனால், தற்போது த.வெ.க. ஆட்சியில் போதைப் பொருட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் பல்வேறு முறைகேடுகளும், நிர்வாகச் சீர்கேடுகளும் அரங்கேறியதாக, அதில் பங்கேற்ற போட்டியாளர்களே வேதனையுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

குறிப்பாக, முதலமைச்சர் விஜய் 'ரீல்ஸ்' எடுப்பதற்காகவே இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து, அந்த விவகாரம் அடங்குவதற்குள், த.வெ.க. அமைச்சரவையில் தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள சரத்குமார் குறித்து மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது.

வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?

அதாவது, த.வெ.க. அமைச்சர் சரத்குமார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் மைதானத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற தோற்றமளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் சரத்குமார், "அது போதைப் பொருள் அல்ல. குழந்தைக்கு மாத்திரையை கரைத்து கொடுப்பதற்காக அதை Crush செய்து கொண்டிருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த வீடியோவை முன்வைத்து, "குழந்தை எங்கே?", "₹500 நோட்டு எதற்கு?", "பேக் வைத்து மறைத்தது ஏன்?", "'Thug Life' என்ற வாசகம் எதற்காக?" உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும், "வீடியோவில் எந்த இடத்திலும் குழந்தையே இல்லை. 'Close Friends' மோடில் பதிவிடப்பட்ட வீடியோ. அதற்கு 'Thug Life' என்று கேப்ஷனும் இடப்பட்டுள்ளது. ஆனாலும், 'அந்த வீடியோவில் அமைச்சர் சரத்குமார் குழந்தைக்கான மாத்திரையைத்தான் பொடியாக்கிக் கொண்டிருந்தார்; அது போதைப் பொருள் அல்ல' என்று எல்லோரும் நம்ப வேண்டும் என்கிறார்களா?" என்று திமுக அயலக அணி விமர்சனம் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories